என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தே.மு.தி.க இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்
    X

    தே.மு.தி.க இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்

    • தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

    இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர், தருமபுரி நகர செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.கே.கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.கே.குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×