search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "king cobra"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன.
    • வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சென்று பார்த்தனர்.

    மூணாறு:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவரது வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் ஒன்று உள்ளது. ஆனால் ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை. இதனால் அந்த தொழுவம் காலியாக கிடந்தது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன. இதனை பார்த்த ராதாகிருஷ்ணன், அந்த பாம்புகள் செல்லும் இடத்தை நோக்கி பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவை அவரது மாட்டு தொழுவத்துக்குள் சென்று, மண்ணுக்குள் பதுங்கியது. அங்கு அதிகளவில் குட்டி பாம்புகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது. மேலும் அங்கு இருந்த குட்டி பாம்புகள், ராஜநாகத்தின் குட்டிகள் என்பது தெரியவந்தது. பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன.

    இதைத்தொடர்ந்து பெரிய ராஜநாகத்தை சாக்குப்பையிலும், அவற்றின் குட்டிகளை பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அடைத்தும் வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

    • இலவடி அணை கால்வாய்களில் ராஜநாகம் ஒன்று சுற்றி வருகிறது.
    • ராஜநாகம் இப்பகுதியிலேயே சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே உள்ள இலவடி அணை கால்வாய்களில் ராஜநாகம் ஒன்று சுற்றி வருகிறது. 15 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் இலவடி அணை, வண்ணாந்துரை ஓடை, சீவலப்பேரியான் கால்வாய்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

    பகல் நேரங்களிலும் இரை தேடி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ராஜநாகம் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் இப்பகுதியிலேயே சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கால்வாய்களில் குளிக்க வரும் பொதுமக்களும் ராஜநாகத்தை கண்டு அலறியடித்து ஓடுகின்றனர்.

    இதனால் கால்வாய்களில் குளிக்க செல்லும் பொதுமக்களும், விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் பீதி அடைந்துள்ளனர். எனவே இந்த ராஜநாகத்தை வனத்துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் ஒரு வீட்டினுள் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை உயிர் பயத்தில் ஓடவிட்ட ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். #KingCobra
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம், மண்டகாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று கொடிய விஷம் கொண்ட ராஜநாகப் பாம்பு புகுந்துள்ளது. வீட்டிற்குள் இருந்தவர்கள் பாம்பு சீறுவதைப் பார்த்ததும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பதறியடித்து வெளியேறினர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த வீட்டின் முன் திரண்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அவர்களைக் கண்டதும் பாம்பு சீறியது. இருப்பினும் உரிய பாதுகாப்புடன் தைரியமாக சென்று பாம்பை பிடித்த வனத்துறையினர், காட்டிற்குள் கொண்டு விட்டனர்.



    பிடிபட்ட ராஜ நாகம் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றும் இந்த பாம்பை பிடிப்பது கடினமான பணி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். #KingCobra

    ×