என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    • சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பெண் ஒருவர் தனது 7 வயது மகன் முன்னிலையில் தனது கணவரை கொன்று, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏ பிரிவு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் முகேஷ் பர்மருக்கும், அவரது மனைவியான சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று காலையிலும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சங்கீதா, கணவரை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு சங்கீதா ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அக்கடிதத்தை கைப்பற்றிய போலீசார், திருமணம் மற்றும் நிதி பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    • வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சந்தோசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் எட்டி குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70), இவரது மனைவி வித்யா (65), பாஸ்கரன்-வித்யா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டின் முன் பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் என்ற தினேஷ், வாசுதேவன் என்ற ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டில் வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதனை பார்த்த அவர்களது மகன் வாசுதேவன் கதறினார்.

    தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அவர்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கடப்பாறை, சம்மட்டி உள்பட பயங்கர ஆயுதங்களால் தம்பதியை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பாஸ்கரன் மற்றும் வித்யா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கொலையாளி சந்தோஷ்


    அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடியதுடன் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பது தெரிய வந்தது.

    அவரை சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேடினர். தொடர்ந்து வீட்டையும் கண்காணித்தனர். அப்போது வெளியல் சுற்றி விட்டு ரத்தக்கரை படிந்த உடையை மாற்றுவதற்காக இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சந்தோசை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

    டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது உடன் வேலை செய்பவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை கட்ட முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.

    அப்போது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்த போது அங்கு பாஸ்கரன் தம்பதியினர் அணிந்திருந்த நகைகளை பார்த்து அந்த நகைகளை கொள்ளையடித்து கடனை அடைக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி நேற்று மதியம் இந்த தம்பதி தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ் கடப்பாறை மற்றும் சம்மட்டியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வித்யாவை சம்பட்டியாலும் கடப்பாறையிலும் முதலில் தலையில் தாக்கினார்.

    அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பாஸ்கரனையும் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகையுடன் தப்பி சென்ற சந்தோஷ் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.

    இரவாகி விட்ட நிலையில் குளித்து விட்டு உடையை மாற்றுவதற்காக வீட்டிற்கு வந்த போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். இன்று சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை நடந்து 4 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கமிஷனர் அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினார். இந்த கொலையில் கொலையாளியை கைது செய்ய கேமரா பதிவுகள் உதவியதாகவும், ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் கேமரா பதிவால் குற்றவாளியையும் இதே போல 4 மணி நேரத்தில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
    • வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.

    7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.

    இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இதுகுறித்து மம்தா போலீசில் புகார் செய்தார்.போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கணவரின் தொல்லை தாங்க முடியாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மம்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவில் மம்தா கணவர் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டார்.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஸ்ரீதர் வலியால் அலறி துடித்தார். ஸ்ரீதரின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் மாடிக்கு ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×