என் மலர்
நீங்கள் தேடியது "Vedan"
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுள் மாத்யூ தாமஸ் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் , ப்ரோமான்ஸ் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் அடுத்ததாக நைட் ரைடர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரபல படத்தொகுப்பாளரான நவ்ஃபல் அப்துல்லா இயக்கியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் மலையாள இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர் மற்றும் பாடகரான வேடன் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ படத்தில் நடித்துத் திறமையை நிரூபித்த மீனாக்ஷி உண்ணிகிருஷ்ணன், இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் இதில் அபு சலீம், ரோனி டேவிட் ராஜ், ரோஷன் ஷணவாஸ், ஷரத் சபா, மெரின் பிலிப், சினில் சைனுடீன், நௌஷாத் அலி, சைத்ரா பிரவீன் மற்றும் நஸீர் சங்கராந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
திரைப்படத்தின் ஒளிப்பதிவை அபிலாஷ் ஷங்கர் மேற்கொண்டுள்ளார். சிறப்பாக, இந்தப் படத்தின் எடிட்டிங் பணியையும் இயக்குநர் தானே செய்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை யாக்சன் கேரி பெரெய்ரா மற்றும் நேஹா எஸ். நாயர் இணைந்து அமைத்துள்ளனர்.
உள்ளக்கல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நிசார் பாபு மற்றும் சஜின் அலி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைப்படம் மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2021 முதல் 2023 முறை ஒன்றாக இருந்தோம்.
- அந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்ததாக பெண் டாக்டர் குற்றச்சாட்டு.
கேரளாவின் பிரபல ராப் பாடகர் வேடன். வேடன் என்று அறியப்படும் ஹிரன்தாஸ் முரளி மீது பெண் டாக்டர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொடர்பில் இருந்துவிட்டு பின்னர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.
வேடன் 2021 முதல் 2023 வரை தாங்கள் ஒன்றாக இருந்தோம். பின்னர் பிரிந்துவிட்டோம். ஒன்றாக இருந்தபோது பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் டாக்டர் புகார் அளித்திருந்தார்.
இருவரும் ஒன்றாக இருந்து பல சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், மனுதாரருக்கு முன்ஜாமீன் மறுப்பது கடுமையான பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிமன்றம், முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டு, அது குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் கைதுக்கும் வழிவகுத்தால், ஒரு தனிநபரின் எதிர்காலத்தை அழிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
- சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.
2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார்
டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக வேடன் அறிமுகமாகிறார் . பரத், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.
வேடன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.
- வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.
குருத்ருகன் என்ற வேடனின் குடும்பம் ஒருநாள் முழுவதும் உணவின்றி வாட நேர்ந்தது.
அதனைக் கண்ட குருத்ருகன் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான்.
காட்டில் விலங்குகளைத் தேடி அலைந்தான்.
அன்று பகல் முழுவதும் விலங்குகள் எதுவும் அவன் கண்ணில் படவில்லை.
அந்திசாயும் நேரத்தில் ஒரு தடாகத்தின் கரையை அடைந்தான்.
நீர் பருகி, தாகத்தை தீர்த்துக் கொண்டான்.
இரவு வேளையில் அத்தடாகத்தில் நீர் பருக எப்படியும் விலங்குகள் வரும் என்று நம்பினான்.
தன்னிடம் இருந்த ஒரு குடுவையில் நீரை எடுத்துக் கொண்டு, தடாகத்தின் கரையில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான்.
விலங்குகளின் வருகைக்காகக் காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்தபடி, முதல் யாமத்தில் ஒரு பெண்மான் நீர் பருக வந்தது.
அதன் மீது அம்பு தொடுக்க முற்பட்டான்.
அந்த அசைவினால், மரத்தின் இலைகள் உதிர்ந்தன.
குடுவை நீரின் ஒரு பகுதியும் கீழே விழுந்தது.
தனக்கு வரவிருந்த ஆபத்தைப் பெண்மான் உணர்ந்தது.
வேடனை நோக்கி, "ஐயா! சற்று நான் சொல்வதைக் கேளுங்கள்" என்றது.
மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.
"ஐயா! உங்கள் குடும்பத்தினரின் பசியைத் தீர்க்க என் உடல் பயன்படப் போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் எனக்குச் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.
எனக்குக் குட்டிகள் உள்ளன.
அவற்றைக் காப்பாற்றும் வகையில், மற்றொரு பெண்மானை என் கணவருக்குத் துணையாக்கி விட்டு, உடனே வந்து விடுகிறேன்.
அதன் பிறகு, என்னை வேட்டையாடலாம்" என்றது அப்பெண்மான்.
முதலில் மானின் வார்த்தைகளை நம்ப மறுத்த வேடன், பிறகு மானின் உறுதிமொழியைக் கேட்டு, அதனைச் செல்ல விடுத்தான்.
இரண்டாவது யாமத்தில் அப்பெண்மானின் சகோதரியாகிய மற்றொரு மான் வந்தது.
அதனை வேட்டையாட முற்பட்டான் குருத்ருகன்.
"ஐயா! எனது குட்டிகளைக் காப்பாற்றும் பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்து விட்டு உடனே வந்துவிடுவேன்,
இது உறுதி" என்றது இரண்டாவது மான்.
அதன் உறுதிமொழியை நம்பிய வேடன் அதனையும் செல்ல விடுத்தான்.
மூன்றாவது யாமத்தில் ஆண்மான் "நாங்கள் ஒருவரை ஒருவர் தேடி வந்தோம். எனினும், ஒருவரை ஒருவர் சந்திக்க இயலவில்லை.
சிறிது நேரம் கொடுங்கள், என் குட்டிகளை அவற்றின் தாய்களிடம் ஒப்படைத்து, உடனே வந்து விடுகிறேன், இது உறுதி என்றது ஆண் மான்.
அந்த ஆண் மானையும் சென்றுவர விடுத்தான் வேடன்.
நான்காம் யாமம் வந்தது.
இரண்டு பெண் மான்களும், ஆண் மானும் ஆக மூன்று மான்களும் தடாகத்தின் கரைக்கு வந்தன.
மூன்று மான்களையும் வேட்டையாட அம்பு தொடுக்க முயன்றான்.
அப்போதும், குடுவை நீர் சிறிது விழுந்தது. மரத்தின் இலைகளும் விழுந்தன.
இச்சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாள்.
வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.
நான்கு யாமங்களிலும் உதிர்ந்த மர இலைகள் வில்வதளங்கள்!
அவ்வாறே, நான்கு யாமங்களிலும் குடுவையில் இருந்த நீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
குருத்ருகன், சிவராத்திரி நாளில், உண்ணாமல் இருந்து, நீர் ஊற்றி அபிஷேகம் செய்து,
வில்வர்ச்சனை செய்ததாக எண்ணிய சிவபெருமான் அவ்வேடனுக்குப் பெரும்பேறு அளித்தான்.
இவ்வரலாறு சிவமகாபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.
நாமும் சிவராத்திரி நாளில் ஈசனை வழிபட்டுப் பேரருள் பெறுவோம்.






