என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "horoscope"

    • சிவாஜிராவின் எதிர்காலத்துக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார்.
    • ஜோதிடர் தனது கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார்.

    சென்னையில் இருந்து வந்த வேகத்தில் சிவாஜிராவ் திரும்பி சென்று விட்டதை கவனித்த தந்தை ரனோஜிராவ் மிகவும் கவலை அடைந்தார். நல்ல அரசு வேலையை மகன் இழந்து விட்டானே என்ற கவலை அவரை மிகவும் வாட்டியது. மகனின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ? என்ற அச்சம் அவர் மனதில் ஆழமாக பதிந்து போனது.

    அதற்கு விடை காண நினைத்தார். சிவாஜிராவின் ஜாதகத்தை பார்த்து எதிர்காலத்தை தெரிந்துக் கொள்ளலாமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. கண்டக்டர் வேலையையும் பறிகொடுத்து விட்டு சென்னையில் சினிமா பட வாய்ப்பும் கிடைக்காமல் மகன் தவிப்பதை பார்த்து ரனோஜிராவுக்கு ஏற்பட்ட வேதனை அடங்கவில்லை.

    சிவாஜிராவை மிக மிக உயர்ந்த அரசு பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது தீராத ஆசையாக இருந்தது. அதற்காக அவர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் வாலிப முறுக்கு காரணமாக சிவாஜிராவ் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

    அதனால்தான் சிவாஜிராவ் பஸ் கண்டக்டர் வேலைக்கு வரவேண்டியது ஆகி விட்டது. அதை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்ட ரனோஜிராவ் தனது மகன் அந்த வேலையிலும் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையை அவர் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

    சிவாஜிராவ் மீது அவர் எந்த அளவுக்கு கண்டிப்பு காட்டினாரோ அதே அளவுக்கு பாசத்தையும் காட்டினார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் அந்த பாசத்தை வெளிப்படையாக காட்டியது இல்லை. சிவாஜிராவ் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு நாளும் மனதார நினைத்து வழிபாடுகள் செய்வது உண்டு.

    இந்த அன்புதான் அவரை சிவாஜிராவுக்கு வேலை இல்லை என்றதும் நிலைகுலைய செய்து விட்டது. தனது மகன் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்று நண்பர்களிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டே இருந்தார். கண்டக்டர் வேலையும் கைநழுவி போய் விட்ட நிலையில் சினிமா வாய்ப்பும் கிடைக்காவிட்டால் மகன் என்ன செய்வான் என்று மிகவும் கவலைப்பட்டார்.

    அதற்கு விடை காண்பதற்காக தன்னுடன் 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவரிடம் கருத்துக்கள் கேட்டார். சிவாஜிராவின் எதிர்காலத்துக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். அதற்கு அந்த போலீஸ்காரர், "ஏன் கவலைப்படுகிறாய்? எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் இருக்கிறார். மிக துல்லியமாக அவர் ஜோதிடம் பார்ப்பார். அவரது வீடு என் வீட்டுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. நாளை சிவாஜிராவ் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வா. அவரிடம் கொடுத்து பார்க்கலாம். அவர் நிச்சயமாக நல்ல வழிகாட்டுவார்" என்றார்.

    ரனோஜிராவுக்கு சற்று நம்பிக்கை வந்தது. மறுநாளே அவர் சிவாஜிராவ் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றார். அவரும் அவரது நண்பரும் அந்த ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர்.

    அவரிடம் இருவரும் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். ரொம்ப யோசித்து அமைதியாக பேசினார். அவரது சாந்தமான முகம் ரனோஜிராவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    அந்த நம்பிக்கையுடன் சிவாஜிராவின் ஜாதகத்தை எடுத்து கொடுத்தார். பிறகு சிவாஜிராவின் குணங்கள் பற்றி பேசத் தொடங்கினார். 9 வயதில் தாயை இழந்த சிவாஜிராவ் சிறுவயதில் இருந்தே மிகுந்த சுட்டித்தனத்துடன் இருந்ததை தெரிவித்தார். நல்ல வேலையை விட்டுவிட்டு சினிமா பயிற்சி பெற சென்று விட்டதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

    கண்டக்டர் வேலை பார்த்தாவது தனது கடைசி மகன் பிழைத்துக் கொள்வான் என்று நினைத்து இருந்த தனக்கு அவனது வேலை பறிபோனதை நினைக்கும்போது தாங்கிக் கொள்ள இயலவில்லை என்று கண்ணீர் விட்டார். அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த ஜோதிடர் சிவாஜிராவின் ஜாதக கட்டங்களை ஆய்வு செய்தார்.

    நிறைய ஏதோ ஏதோ எழுதி கூட்டி-கழித்து பார்த்தார். தனியாகவும் ஒரு சீட்டில் எழுதினார். சிவாஜிராவ் பற்றி அவர் என்ன எழுதுகிறார் என்பது ரனோஜிராவுக்கு புரியவில்லை. பிறகு திடீரென அந்த ஜோதிடர் தனது கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டார்.

    ஏதோ சித்தர்கள் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து இருப்பது போல இருந்தார். சுமார் 30 நிமிடங்கள் அவர் அப்படியே இருந்துக் கொண்டிருந்தார். ரனோஜிராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஜோதிடர் என்ன சொல்ல போகிறாரோ? என்று தவித்தபடியே இருந்தார்.

    சிறிது நேரம் கழித்து ஜோதிடர் கண்களை திறந்தார். சிவாஜிராவ் பற்றி மேலும் சில தகவல்களை கேட்டார். சிவாஜிராவ் பிறந்த நேரம், பிறந்த நாள், பிறந்த இடம், அப்பா பெயர், அம்மா பெயர், உடன் பிறந்தவர்கள் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்டு தனியாக ஒரு தாளில் எழுதிக் கொண்டார்.

    ஜோதிடர் என்ன சொல்லப் போகிறாரோ? என்ற தவிப்பு ரனோஜிராவ் மனதுக்குள் எழுந்தது. அப்போது அந்த ஜோதிடர் ஒரு தாளை எடுத்து அதில் கட்டம் போட்டு ஏதேதோ... எழுத ஆரம்பித்தார். அவர் எழுதியது ஒன்றும் ரனோஜிராவுக்கு புரியவில்லை. அவர் எழுதியதையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

    ஜோதிடர் ஏதாவது எதிர்மறையாக சொல்லி விடுவாரோ? என்ற பயம் அவருக்குள் ஏற்பட்டது. திடீரென அந்த ஜோதிடர் ஒரு தாளை எடுத்து ேகாடுகள் போட்டு ஏதேதோ... எழுதத் தொடங்கினார். கைவிரல்களை மடக்கி எண்ணி ஏதேதோ... எழுதினார்.

    அவரது வாய் சூரியன், சந்திரன், செவ்வாய், சனி என்று ஏதேதோ... முணுமுணுத்தது. அவரது செயல்பாடுகளை பார்த்து ரனோஜிராவ் சற்று பயப்பட்டார். ஜோதிடரின் முகத்தை பார்க்கவே அவருக்கு பயமாக இருந்தது. கடும் தவிப்புக்குள்ளானார்.

    அப்போது ஜோதிடர் ரனோஜிராவை பார்த்து பேசத் தொடங்கினார்.

    "உங்கள் மகன் சிம்ம லக்னம், மகர ராசியில் பிறந்து இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாகவும், தைரியம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். தற்போது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலம் ஆகும். அதன்படி பார்த்தால் உங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    பொதுவாகவே உங்களது மகன் மற்றவர்கள் சொல்வதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார். தனது மனதில் என்ன தோன்றுகிறதோ? அதன்படி துணிச்சலாக செயல்படுவார். உங்கள் மகன் ஜாதகத்தில் சூரியனும், வியாழனும் ஒரு கட்ட அமைப்பில் உள்ளன.

    இத்தகைய கட்ட அமைப்பில் ஜாதகம் இருப்பது மிக மிக அபூர்வமானது. கோடியில் ஒருவருக்குத்தான் இந்த அமைப்பு கிடைக்கும். அந்த அருமையான ஜாதக அமைப்பு உங்களது மகன் ஜாதகத்தில் இருக்கிறது.

    உங்களது மகன் கண்டக்டர் வேலையில் இருந்து நடிப்பு பயிற்சிக்கு போனதாக சொல்கிறீர்கள். அங்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று சொல்கிறீர்கள். கவலைப்படாதீர்கள் உங்களது மகன் எந்த துறைக்கு சென்றாலும் அதில் முதன்மையாக ஒரு தலைவன் போல இருப்பார். அவரது ஜாதகத்தில் உள்ள ராசி அமைப்புகள் இதை தெள்ளதெளிவாக சொல்கின்றன.

    உங்களது மகன் நிச்சயமாக இன்னொருவருக்கு அடிமையாக இருந்து வேலை பார்க்க மாட்டார். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் மிக மிக உயர்ந்த இடத்தில் இருப்பார். அவரது கை அசைவுக்கு பலரும் கட்டுப்படுவார்கள்.

    இவ்வாறு அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டதும் ரனோஜிராவுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், மற்றொரு பக்கம் பிரமிப்பாகவும் இருந்தது. ஜோதிடர் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. படபடப்புடன் காணப்பட்டார். அவரது இருதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அந்த ஜோதிடரை ரனோஜிராவ் நம்பிக்கை இல்லா மல்தான் பார்த்தார். அவரது முகப்பாவனை மூலம் அர்த்தத்தை ஜோதிடர் புரிந்துக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசினார்.

    "நான் உங்கள் மகன் ஜாதகத்தை கணித்து பார்த்து விட்டு சொல்லும் தகவல்களை நீங்கள் நம்ப மறுக்கலாம். நான் பல ஆண்டுகளாக ஜாதகம் பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு ஜாதகத்தை கையில் எடுத்ததும் கிரக நிலைகளை வைத்து எளிதாக கணித்து விடுவேன்.

    ஆனால் உங்களது மகன் ஜாதகம் மிக மிக அற்புதமானது. என் வாழ்நாளில் இப்படி ஒரு ஜாதகத்தை நான் பார்த்தது இல்லை. இந்த ஜாதக அமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டமும் என்னை திணற வைத்து விட்டது.

    சில கட்ட அமைப்புகள் உண்மையில் என்னை உறுதியாக கணிக்க முடியாமல் திணற வைத்து விட்டன. அந்த அளவுக்கு இந்த ஜாதகக்காரர் மிக மிக உன்னதமாக இருக்கிறார். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவரது உச்சம் மிக வேகமாக இருக்கும்.

    இந்த ஜாதகக்காரரை பொறுத்தவரை என்னால் சில விஷயங்களை ஆணித்தரமாக சொல்ல முடியும். ஒன்று இந்த ஜாதகக்காரர் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறுவார். நாடே கொண்டாடும் அளவுக்கு அவருக்கு புகழ் கிடைக்கும். அவரது செயல்பாடுகள் அவரை அசைக்க முடியாத சக்தியாக மாற்றும்.

    நீண்ட நாட்களுக்கு அவர் மக்களால் விரும்பப்படும் ஒரு மாபெரும் சக்தியாக இருப்பார். நீண்ட நாட்களுக்கு அவரை பெயரும், புகழும், பணமும் தலைமை இடத்தில் வைத்துக் கொண்டே இருக்கும். நான் சொல்வது நிச்சயம் நடக்கும் பாருங்கள். அந்த அளவுக்கு இந்த ஜாதகக்காரர் மிக மிக புண்ணியம் செய்தவராக இருக்கிறார்" என்றார். ஜோதிடர் சொன்னதை கேட்க... கேட்க... ரனோஜிராவுக்கு பிரமிப்பாக இருந்தது. மற்றொரு பக்கம் மனதுக்குள் இனம் புரியாத பயம் வந்தது. ஜோதிடர் என்ன இப்படி சொல்கிறார் என்று அதிர்ச்சியோடு பார்த்தார்.

    அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    • அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன.
    • அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.

    ஜாதகம் பார்க்க செல்பவர்கள் நல்ல நேரத்தில் ஜாதகம் பார்க்க விரும்புவதுண்டு. சிலர் ராகு காலம், எம கண்டம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். சிலர் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்க விரும்புவதில்லை.

    குறிப்பாக பலருக்கும் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். அது பற்றிய விளக்கத்தை இங்கே காண்போம்.

    அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம். மேலும் அக்காலத்தில் பல கிராமங்களில் மின் இணைப்புகளே கிடையாது. மின் விளக்கு இல்லாத வீடுகள் பல இருந்தன. அதோடு பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் தான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். மாலை நேரத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு வீட்டில் மின் விளக்கு இல்லாமல், மண்ணெண்ணெய் விளக்கோ அல்லது நல்லெண்ணெய் விளக்குகளின் ஒளிகளைக் கொண்டுதான் ஜாதகம் கணித்துச் சொல்வார்கள்.

    இருட்டில் சாதாரணமாக நாம் எந்த வேலைகளையும் செய்ய மாட்டோம் அல்லவா? மின் விளக்கு வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அப்படி இருக்கும் போது, நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகத்தை, சும்மா ஏனோ தானோ என்று பார்த்து விட முடியுமா?.

    மேலும் அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை வயதான ஜோதிடர்கள் விளக்கொளியில் பார்க்கும்போது, தெளிவாக கணிக்க முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது. அதாவது நம் எதிர்காலப் பலன்கள் சொல்லும் போதோ அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கும் போதோ, அது தவறாக போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால் ஓலைச்சுவடியில், புள்ளி இல்லாத எழுத்துக்களைக் கொண்டுதான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். (எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில் புள்ளிவைத்தால் அது கிழிந்து விடும்). அதனால் இரவு நேரம் என்றால் சரியாக பார்த்து படிக்க இயலாது.

    உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சுக்ரன் என்று இருப்பதை ஜோதிடர்கள் அந்த இருள் ஒளியில் சுக்ரனை, சூரியன் என்று படித்துவிட்டு பலன்களை மாற்றி கூறி ஜாதகர்களின் எதிர்காலத்தை மாற்றி பலன் உரைக்க வேண்டி வரும். அதுவே பகல் வேளை என்றால் தெளிவாக பார்த்து பலன்களை சொல்லிவிடலாம். இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் இரவு பொழுதில் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று ஒரு விதியை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.

    ஆனால் தற்காலத்தில் அதுபோன்ற எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் இப்போது மின் வசதிகள் இருக்கிறது. மேலும் ஓலைச்சுவடிகளைப் போல் அல்லாமல், தற்போது கம்ப்யூட்டர், கைகளால் எழுதுவது என்று எதுவாக இருந்தாலும் புள்ளி வைத்து எழுகிறோம். இதனால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும். அந்த காலகட்டம்போல் இந்தக் காலத்தில் எந்த பிரச்சினைகளும் இல்லாததால் நாம் எளிதாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட ஜோதிடரிடம் அணுகி ஜாதகம் பார்க்க இயலும். எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற மூட நம்பிக்கைகளை நாம் களைவது மிக முக்கியமானதாகும்.

    இதே போன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளின் போது ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற கருத்துக்களும் தவறானதாகும். திருமண சுப முகூர்த்தம், தொழில் தொடங்கும் நாள் மற்றும் நேரம், கல்வி கற்க ஆரம்பிக்கும் நாள், சாந்தி முகூர்த்தம் குறிப்பதற்காகத்தான் நாம் நல்ல நேரம் பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற ஜாதகம் பார்ப்பதற்கெல்லாம் அது தேவையில்லை. ஆகவே இது போன்ற மூட நம்பிக்கைகளை நீக்கி விடுவது மிகவும் நல்லது.

    'ஜோதிடச்சுடர்' ந.ஞானரதம்,

    சென்னை.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-6 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி இரவு 10.56 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 7.03 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்.

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா. பழனி ஆண்டவர் பவனி, பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-சிந்தனை

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-ஆர்வம்

    துலாம்-சுகம்

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு-போட்டி

    மகரம்-உயர்வு

    கும்பம்-பெருமை

    மீனம்-அன்பு

    • திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ரதோற்சவம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-7 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி இரவு 8.47 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.35 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ரதோற்சவம். சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-அன்பு

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-மேன்மை

    கன்னி-பண்பு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பெருமை

    மகரம்-நிம்மதி

    கும்பம்-வெற்றி

    மீனம்-நிறைவு

    • சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-8 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 6.51 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ரேவதி மாலை 4.18 மணி வரை. பிறகு பிறகு அசுவினி.

    யோகம்: அமிர்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று) சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாதனை

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-சுகம்

    கடகம்-நலம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-முயற்சி

    துலாம்-திறமை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு-தெளிவு

    மகரம்-அமைதி

    கும்பம்-வெற்றி

    மீனம்-கடமை

    • திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-9 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி மாலை 5.13 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 3.19 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம், தங்கக் குதிரை வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பவனி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-பரிவு

    கடகம்-பிரீதி

    சிம்மம்-லாபம்

    கன்னி-பெருமை

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- பணிவு

    மகரம்-நட்பு

    கும்பம்-மாற்றம்

    மீனம்-சாந்தம்

    • திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ஜோதிஸ்வரூபமாய் மகாதீப தரிசனம்.
    • திருப்போரூர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-10 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.57 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.40 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று திருக்கார்த்திகை. திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ஜோதிஸ்வரூபமாய் மகாதீப தரிசனம், இரவு தங்க விருஷப சேவை. திருப்போரூர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம். கணம்புல்லர் நாயனார் குருபூஜை. பழனி ஆண்டவர் தீபோற்சவ காட்சி. சூரியனார் கோவில் ஸ்ரீ சூர்ய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-பிரீதி

    கடகம்-உவகை

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-முயற்சி

    துலாம்- பற்று

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- சிந்தனை

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-பயணம்

    • சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
    • திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-11 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி பிற்பகல் 3.07 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.26 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பாஞ்சராத்ர தீபம். பவுர்ணமி. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவண்ணாமலை அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம். நத்தம் மாரியம்மன் லட்ச தீபக்காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-வரவு

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-நட்பு

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- ஆதாயம்

    மகரம்-பயணம்

    கும்பம்-துணிவு

    மீனம்-பண்பு

    • மன்னார்குடி ஸ்ரீ ராஜாகோபால சுவாமி புறப்பாடு.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-12 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 2.43 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜாகோபால சுவாமி புறப்பாடு. திருவண்ணாமலை அபிதகுசலாம்பாள் சமேத அருணாசலேசுவரர் கைலாசகிரி பிரதட்சணம். பராசக்தி அம்மன் தெப்பம். திருப்பாணாழ்வர் திருநட்சத்திர வைபவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-போட்டி

    கடகம்-நலம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-அன்பு

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- நிறைவு

    மகரம்-நன்மை

    கும்பம்-சுபம்

    மீனம்-ஆர்வம்

    • திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-13 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை பிற்பகல் 2.51 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 3.21 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-லாபம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- சுகம்

    மகரம்-இன்பம்

    கும்பம்-பக்தி

    மீனம்-பரிவு

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையபன் புஷ்பாங்கி சேவை
    • விநாயகர் தலங்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-14 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை பிற்பகல் 3.31 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: திருவாதிரை மாலை 4.36 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர் தலங்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையபன் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவர் உடன் புறப்பாடு. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-பாராட்டு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- பிரீதி

    மகரம்-பாசம்

    கும்பம்-தேர்ச்சி

    மீனம்-பண்பு

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-15 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி மாலை 4.40 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 6.17 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருநாகேசுவரம் நாகநாதர் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-சிந்தனை

    மிதுனம்-மேன்மை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-தனம்

    கன்னி-உழைப்பு

    துலாம்-உவகை

    விருச்சிகம்-நலம்

    தனுசு- உயர்வு

    மகரம்-நன்மை

    கும்பம்- பெருமை

    மீனம்- வாழ்வு

    ×