என் மலர்
நீங்கள் தேடியது "ராசிபலன்"
- குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு திருமஞ்சனம்.
- உப்பூர் ஸ்ரீவெயிலுகாந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-22 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை நண்பகல் 12.31 மணி வரை பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம் : மிருகசீரிஷம் பின்னிரவு 3.56 மணி வரை பிறகு திருவாதிரை.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
இன்று சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு திருமஞ்சனம். மயிலாடுதுறை ஸ்ரீகவுரிமாயூரநாதர் வெள்ளிப்பட்டிச் சப்பரத்தில் அருள்மிகு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. வீரவநல்லூர், பத்தமடை கோவில்களில் அம்பாள் வீதி உலா. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பனி விநாயகருக்கு அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாறையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்கவிநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகாந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால் சுவாமி கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-நன்மை
கடகம்-தாமதம்
சிம்மம்-நலம்
கன்னி-அன்பு
துலாம்- நட்பு
விருச்சிகம்-புகழ்
தனுசு- ஆதரவு
மகரம்-லாபம்
கும்பம்-மேன்மை
மீனம்-இன்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கலபமாக இருப்பர்.
ரிஷபம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
மிதுனம்
குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
கடகம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டும்.
சிம்மம்
நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.
கன்னி
முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
துலாம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள், விரயங்கள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.
தனுசு
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண் பழிகள் அகலும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி மூலம் நல்ல செய்தியொன்று வந்து சேரும். பணவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி தரும்.
மீனம்
கடினமான காரியத்தைக் கூட எளிதாகச் செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
- மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம்.
- கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-21 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பிற்பகல் 2.48 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம் : கார்த்திகை காலை 6.58 மணி வரை. பிறகு ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.
யோகம் : சித்த, மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம். மகத்துவஜாரோகணம் திருக்கொடியேற்றம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்ற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-லாபம்
கடகம்-செலவு
சிம்மம்-ஆதாயம்
கன்னி-சுபம்
துலாம்- விருத்தி
விருச்சிகம்-கடமை
தனுசு- பயணம்
மகரம்-பாசம்
கும்பம்-உயர்வு
மீனம்-ஆக்கம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சித்த செயலில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும்.
சிம்மம்
குழப்பங்கள் அகலும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
கோவில் வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்
வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வியாபாரப் போட்டி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சிகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும். பயணம் பலன் தரும்.
மகரம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
கும்பம்
தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
மீனம்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-20 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை மாலை 5.08 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : பரணி காலை 8.39 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று கார்த்திகை, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
இன்று கார்த்திகை விரதம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதக்காட்சி. தென்காசி, வீரவநல்லூர் கோவில்களில் ஸ்ரீ அம்பாள் வீதியுலா. கிடங்கழி நாயனார் குருபூஜை, திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை வெள்ளிச் சப்பரத்திலும் இரவு கமல வாகனத்திலும் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-ஜெயம்
கடகம்-ஆதரவு
சிம்மம்-நற்சொல்
கன்னி-மாற்றம்
துலாம்- கவனம்
விருச்சிகம்-திடம்
தனுசு- சிந்தனை
மகரம்-யோகம்
கும்பம்-அமைதி
மீனம்-சுபம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.
மிதுனம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.
கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். புதிய பங்குதாரர்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.
சிம்மம்
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நிதி நெருக்கடி ஏற்படும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. குடும்பச்சுமை கூடும். எதிர்பாராத விரயம் உண்டு.
துலாம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்கும். இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் உருவாகும். மருத்துவச் செலவு உண்டு.
விருச்சிகம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் புதியவர்கள் வந்திணைவர்.
தனுசு
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் வரலாம்.
மகரம்
நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். சகோதரர் அனுகூலம் உண்டு. கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தொழில் போட்டிகள் அகலும்.
கும்பம்
புகழ்மிக்கவர்களின் ஆதரவு உண்டு. பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
மீனம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். பணவரவு திருப்தி அளிக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொல்லாதவர்கள் தானாகவே விலகுவர்.
ரிஷபம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். சுபச்செலவு உண்டு. உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.
மிதுனம்
நல்லது நடக்கும் நாள். எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
கடகம்
யோகமான நாள். உடல் நலம் சீராகும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்சுமை குறையும். மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.
சிம்மம்
பொதுப்பிரச்சனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு.
கன்னி
முயற்சியில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். வியாபார விரோதங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பொறுமையாகப் பழகுவது நல்லது.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதிரிகளின் பலம் குறையும். வியாபாரம் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். வி.ஐ.பி. க்களின் சந்திப்பு கிட்டும். வியாபார முன்னேற்றம் உண்டு.
தனுசு
நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
மகரம்
பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். வீடு மாற்றம் மற்றும் நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட இயலாது.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு தொகை வந்து சேரும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர்.
- திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம்.
- விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-19 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி இரவு 7.27 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : அசுவினி காலை 10.14 மணி வரை பிறகு பரணி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுணர்மி, மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமி திருமஞ்சனம், நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று பவுர்ணமி. கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சை ஸ்ரீ பெருவுடையார் கோவிலில் அன்னாபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-நட்பு
கடகம்-உவகை
சிம்மம்-ஈகை
கன்னி-ஆதரவு
துலாம்- அன்பு
விருச்சிகம்-ஆசை
தனுசு- சுகம்
மகரம்-பெருமை
கும்பம்-நற்செயல்
மீனம்-வெற்றி
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-18 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 9.42 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : ரேவதி காலை 11.42 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் அபிஷேகம்
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உண்மை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-ஆதாயம்
கடகம்-நிம்மதி
சிம்மம்-யோகம்
கன்னி-பணிவு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-அமைதி
தனுசு- மாற்றம்
மகரம்-உவகை
கும்பம்-கடமை
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வருமானம் உயரும்.
ரிஷபம்
வீண்பழிகள் அகலும் நாள். வீடுமாற்றங்கள் நன்மை தரும். வங்கிகளில் வைப்புநிதி உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் உதவி உண்டு.
மிதுனம்
பஞ்சாயத்துக்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடப்பிறந்தவர்களின் வருகை உண்டு.
கடகம்
முயற்சிகள் கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு காரணமானவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
சிம்மம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். தனவரவில் தடைகள் உண்டு.
கன்னி
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
துலாம்
வருமானம் திருப்தி தரும் நாள். திட்டமிட்டுச் செயலாற்றிச் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் தனி முத்திரை பதிப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
விருச்சிகம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச்சந்திப்பீர்கள்.
தனுசு
பற்றாக்குறை அகலும் நாள். மன அமைதிக்காக ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதை நம்பியும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடுமாற்றங்கள் ஏற்படலாம்.
கும்பம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
மீனம்
ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியும் நாள். உறவினர் வழி ஒத்துழைப்பு மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
பூசல்கள் அகன்று புதிய பாதை புலப்படும் நாள். வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி ஏற்படும்.
ரிஷபம்
வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
மிதுனம்
மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைத்த வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் மீது குறை கூறுவர். ஆரோக்கிய பாதிப்புகள் உண்டு.
கன்னி
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.
துலாம்
கை நழுவி சென்ற சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
விருச்சிகம்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகரம்
சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெறவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
கும்பம்
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடுவீர்கள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம்.
மீனம்
லாபகரமான நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பாராட்டும், புகழும் கூடும்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- சாலிசந்தை ஸ்ரீ கருணாயானந்த சுவாமிகள் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-17 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி இரவு 11.49 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.02 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பிரதோஷம், சுபமுகூர்த்த தினம், சிவன் கோவில்களில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி
இன்று பிரதோஷம், சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. சாலிசந்தை ஸ்ரீ கருணாயானந்த சுவாமிகள் குரு பூஜை.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் காட்சியளருல். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவள்ளி அம்மாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-தனம்
மிதுனம்-வெற்றி
கடகம்-தாமதம்
சிம்மம்-ஆக்கம்
கன்னி-ஓய்வு
துலாம்- உற்சாகம்
விருச்சிகம்-லாபம்
தனுசு- வரவு
மகரம்-நன்மை
கும்பம்-உழைப்பு
மீனம்-புகழ்






