என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasco da Gama"

    • இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
    • மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்றார்.

    மணிப்பூர் பற்றி எரியும்போது மத்திய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியதாகவும் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பதிலளித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே,

    "வாஸ்கோடகாமா போர்ச்சுகலிலிருந்து ஆப்பிரிக்கா வழியாக இந்தியாவை அடைய சுமார் 11 மாதங்கள் எடுத்துக் கொண்டார், அப்போது அவருக்கு கடல் வழி கூட தெரியாது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து வட அமெரிக்காவை அடைய இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் இவ்வளவு பெரிய மனிதாபிமான நெருக்கடியின் போது, எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து மணிப்பூரை அடைய இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.   

    இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 70,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். நீங்கள் மணிப்பூரை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றியுள்ளீர்கள். வடகிழக்கு மற்றும் இந்தியா மீதான உங்கள் அக்கறையை இப்படித்தான் வெளிப்படுத்துவீர்களா? என கார்கே கேள்வி எழுப்பினார். கார்கேவின் இந்த உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

    மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டநிலையில் கார்கே இந்த உரையை நிகழ்த்தினார். மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்பு விழாவிற்கு சற்று முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே பல மாதங்களாக நடந்த இன வன்முறையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிரேன் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    ×