என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் விமானம்"

    • ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
    • அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.

    பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.

    ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

    இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.

    இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.

    கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலம் செல்கிறார்.
    • அங்கு அம்பாலா விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலத்தின் அம்பாலாவுக்கு செல்கிறார்.

    அங்குள்ள விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
    • இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

    இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே அதனை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.
    • இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

    புதுடெல்லி:

    விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    இந்த விமானங்கள் இதுவரை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே அதனை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அது தயாரிக்கப்பட உள்ளது. முழு விமானமும் இந்தியாவில் தயாரிக்கப்படாது. விமானத்தின் உடல்பாகம் மட்டும் இங்கே தயாரிக்கப்படும்.

    இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. உற்பத்தி பரிமாற்றம் தொடர்பான 4 ஒப்பந்தங்களில் அவை கையெழுத்திட்டுள்ளன. அதாவது விமானத்தின் கூம்பு வடிவ முன்பகுதி, மையப்பகுதி, பின்புற பகுதி மற்றும் பின்புற பக்கவாட்டு பகுதி ஆகியவற்றுக்காக 4 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் விமானத்தின் கூண்டு பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் விமான உடல் பாகங்களின் முதல் பகுதி 2028-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாதம் 2 உடல்பகுதிகள் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ரபேல் விமானங்கள் பிரான்சுக்கு வெளியே இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட இருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசின் 'மேன் இன் இந்தியா' மற்றும் ஆத்ம நிர்பார் முயற்சிகளுக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் உறுதுணை புரிந்துள்ளது.

    • 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
    • இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும்.

    பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி நேற்று விளக்கம் அளித்தார்.

    அப்போது ஆபரேசன் சிந்தூர நடவடிக்கையின் போது ரஃபேல் விமானம் உட்பட ஏதேனும் தளங்களை இந்தியா இழந்ததா என்று ஏ.கே.பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? என்பது தான். அதற்கான பதில் ஆம். இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும். நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

    நாங்கள் குறிவைத்த இலக்குகளை அடைந்துவிட்டோம், எங்கள் அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் பன்னாட்டு போர் விமானங்களின் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் கலந்து கொள்கின்றன.

    இதற்காக இரண்டு சி 17 மற்றும் இரண்டு ஐஎல்-78 ரக ரபேல் விமானங்கள் அனுப்பபடுகிறது. இந்த 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.

    • டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் பாரிசில் கைது செய்யப்பட்டார்.
    • இந்த கைதுக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    அபுதாபி:

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்தக் கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

    இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டியம் இருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

    அபுதாபியில் பிரெஞ்சு கடற்படை தளம் இயங்கி வருகிறது. அதேசமயம், பிரான்சிடமிருந்து லெக்லெர்க் டாங்கிகள் மற்றும் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயன்படுத்தி வருகிறது. மேலும் சில போர் விமானங்களை வாங்க யுஏஇ அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. துரோவ் கைது எதிரொலியால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக யு.ஏ.இ. அறிவித்துள்ளது.

    ×