என் மலர்tooltip icon

    இந்தியா

    ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? - இழப்புகள் போரின் ஒரு பகுதி என விமானப்படை பதில்
    X

    ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? - இழப்புகள் போரின் ஒரு பகுதி என விமானப்படை பதில்

    • 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
    • இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும்.

    பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி நேற்று விளக்கம் அளித்தார்.

    அப்போது ஆபரேசன் சிந்தூர நடவடிக்கையின் போது ரஃபேல் விமானம் உட்பட ஏதேனும் தளங்களை இந்தியா இழந்ததா என்று ஏ.கே.பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? என்பது தான். அதற்கான பதில் ஆம். இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும். நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

    நாங்கள் குறிவைத்த இலக்குகளை அடைந்துவிட்டோம், எங்கள் அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×