search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய விமான படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்- நெல்லை கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    இந்திய விமான படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்- நெல்லை கலெக்டர் தகவல்

    • இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-ம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதியாக பிளஸ்-2 வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது 2 வருட தொழிற்கல்வி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். இந்த ஆட்சேர்ப்பு 3 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதலாவதாக எழுத்து தேர்வு 13.10.2023 அன்று நடைபெறுகிறது. 2-வதாக உடற்தகுதி தேர்வும், 3-வதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

    இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×