என் மலர்tooltip icon

    உலகம்

    மோதலில் ஒரு ரஃபேல் விமானம் தான் வீழ்ந்தது.. அதுவும் பாகிஸ்தானால் அல்ல - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
    X

    மோதலில் ஒரு ரஃபேல் விமானம் தான் வீழ்ந்தது.. அதுவும் பாகிஸ்தானால் அல்ல - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

    • மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
    • டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே 7 அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியத. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கூறியதை ரஃபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மறுத்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், இந்தியா ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டுமே இழந்தது என்றும், அதுவும் பாகிஸ்தான் தாக்குதலால் அல்ல என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    "ஒரு ரஃபேல் விமானம் அதிக உயரத்தில் பறக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. எங்கள் ஸ்பெக்ட்ரா மின்னணு போர் அமைப்பு தரவு பாகிஸ்தான் நடவடிக்கையால் விபத்து நிகழவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.

    Next Story
    ×