என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஃபேல் ஒப்பந்தம்"

    • 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
    • அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

    "ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.

    இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெற உள்ளது.
    • ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.

    இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெற உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா தனது போர் விமானங்களை 50% தள்ளுபடியை வழங்கியுள்ளதுடன், எளிதாக கட்டணம் செலுத்தும் ஆப்ஷன்களையும் வழங்கியுள்ளது என கூறப்படுகிறது.

    முன்னதாக மோதலில் இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனாவின் J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
    • போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

    முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

     இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.

    ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.

    ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

    திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.  

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    • நிறைய பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது
    • இந்தியா பிரான்ஸ் இடம் இருந்து ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்தது.

    உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசின் செயலின்மை குறித்து விமர்சித்துள்ளார்.

    ரபேல் என்று எழுதப்பட்ட மற்றும் எலுமிச்சை மிளகாய் தொங்கவிடப்பட்ட ஒரு பொம்மை விமானத்தை காட்டி மத்திய அரசை அவர் கேலி செய்துள்ளார்.

    "நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, மக்கள் இதனால் அவதிப்படுகிறார்கள். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நமது இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

    ஆனால், நிறைய பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது. அவர்கள் ரஃபேலை கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் அதன் ஹேங்கர்களில் மிளகாய் மற்றும் எலுமிச்சை தொங்கவிட்டுள்ளனர்.

    பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது அவர்கள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்தியா பிரான்ஸ் இடம் இருந்து ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
    • ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.

    இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் வாங்கிய நிலையில் தற்போது ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது.

    தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.

    ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

    ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.  

    • 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
    • ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.

    இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

    ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

    ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக எழுப்பப்பட்ட சர்ச்சை குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #RafaleDeal
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து  36 டஸ்ஸால்ட் ரஃபேல் என்ற போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னர் பேசுகையில், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வெவ்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். முதலில் ஒப்பந்தம் வெளிப்படையானது என்றார், பிறகு அது மிகப்பெரிய் ரகசியம் என்கிறார். எனவே இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது’ என குற்றம் சாட்டினார்.

    அதேபோல், மத்திய அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசியபோதும், ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடியின் நெருங்கிய நண்பர் பயனடைந்திருப்பதாகவும், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நிர்மலா சீதாராமன் உரிய பதிலளிக்க வேண்டும்  எனவும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் மகாத்மா காந்தியின் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ் பாப்பர், குலாம் நபி ஆசாத், அனந்த் ஷர்மா, அம்பிகா சோனி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி சுசில் குப்தா உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்குபெற்ற இந்த போராட்டத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய பதிலளிக்குமாறு கோஷம் எழுப்பினர்.

    மேலும், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, இன்று நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் எம்.பி, காகிதத்தால் செய்யப்பட்ட விமானத்தை காட்டி, பிரான்ஸை விட தாம் சிறப்பாக விமானம் செய்வதாகவும், தமக்கும் இதுபோன்ற புதுவாய்ப்பு ஒன்றை வழங்குமாறும் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். #RafaleDeal
    ×