என் மலர்tooltip icon

    இந்தியா

    பேருக்கு தான் ரஃபேல் போர் விமானம்..  மிளகாய் மற்றும் எலுமிச்சை தொங்கவிட்டு காங்கிரஸ் தலைவர் கிண்டல்
    X

    பேருக்கு தான் ரஃபேல் போர் விமானம்.. மிளகாய் மற்றும் எலுமிச்சை தொங்கவிட்டு காங்கிரஸ் தலைவர் கிண்டல்

    • நிறைய பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது
    • இந்தியா பிரான்ஸ் இடம் இருந்து ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்தது.

    உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசின் செயலின்மை குறித்து விமர்சித்துள்ளார்.

    ரபேல் என்று எழுதப்பட்ட மற்றும் எலுமிச்சை மிளகாய் தொங்கவிடப்பட்ட ஒரு பொம்மை விமானத்தை காட்டி மத்திய அரசை அவர் கேலி செய்துள்ளார்.

    "நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, மக்கள் இதனால் அவதிப்படுகிறார்கள். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நமது இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

    ஆனால், நிறைய பேசும் இந்த அரசாங்கம், பயங்கரவாதிகளை நசுக்குவோம் என்று கூறுகிறது. அவர்கள் ரஃபேலை கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் அதன் ஹேங்கர்களில் மிளகாய் மற்றும் எலுமிச்சை தொங்கவிட்டுள்ளனர்.

    பயங்கரவாதிகள், அவர்களை ஆதரிப்பவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது அவர்கள் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்தியா பிரான்ஸ் இடம் இருந்து ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் செய்தது. ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×