என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stock Market"

    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
    • வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.

    ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு நரேந்திரபூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவபூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் சிவபூபதி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அருகில், இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டதால், உயிர் தப்பிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவபூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும், சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்து வந்துள்ளார்.

    வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .

    அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.

    அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

    அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச்சந்தையில் , ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

    ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகவும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

    • 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் (opinion trading) போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ (Probo), எம்.பி.எல் (MPL) மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி (SportsBaazi) போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.

    இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐடிசி நிறுவன பங்கு 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது.
    • பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 73.75 புள்ளிகளும் சரிந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

    நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், நிஃப்டி 174.95 புள்ளிகளும் சரிந்த நிலையில், இன்று 2ஆவது நாளாகவும் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,551.63 புள்ளியாக இருந்தது. இன்று காலை 4 புள்ளிகள் சரிவுடன் 81,457.61 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. அதிக பட்சமாக 81,613.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,244.02 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 239.31 புள்ளிகள் சரிந்து 81,312.32 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,826.20 புள்ளியாக இருந்தது. இன்று காலை 6 புள்ளிகள் உயர்ந்து 24,832.50 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிக பட்சமாக 24,864.25 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,737.05 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 73.75 புள்ளிகள் சரிந்து 24,752.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஐடிசி நிறுவனத்தின் பங்கு இன்று 3 சதவீதம் அளவிற்கு சரிந்தது. அந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான BAT Plc, அதன் பங்குகளில் 2.5 சதவீதத்தை 1.51 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (12927 கோடி ரூபாய்) விற்பனை செய்ததால் ஐடிசி பங்கு கடும் சரிவை சந்தித்தது.

    மேலும் இந்தூஸ்இந்த், நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, பவர் கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா பங்குகளும் சரிவை சந்தித்தன.

    பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் ஏற்றம் கண்டன.

    தெற்காசிய பங்குச் சந்தைகளில் தென்கொரிய பங்குச் சந்தை மற்றும் ஏற்றம் கண்டது. ஜப்பான், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவை எதிர்கொண்டது. அமெரிக்க பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டிருந்தது.

    • சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.
    • பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.

    இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.

    சர்வதேச சந்தைகளின் பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை, சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 872 புள்ளிகள் இழந்து 81,186 ஆக இருந்தது.

    தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 261 புள்ளிகள் சரிந்து 24,683 ஆக இருந்தது.

    டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.85.63 ஆக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.

    மாருதி (-2.76%), மஹிந்திரா & மஹிந்திரா (-2.13%), அல்ட்ராடெக் சிமென்ட் (-2.04%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-2.01%), நெஸ்லே இந்தியா (-1.92%) ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.

    நேற்றும் பங்குச் சந்தை சரிவுடனே காணப்பட்டது. சென்செக்ஸில் மட்டும் 443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்மூலம் சமீபத்திய நிலவரப்படி, முதலீட்டாளர்களுக்கு ரூ. 5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    • ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
    • போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

    முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

     இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.

    ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.

    ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

    திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.  

    • ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன.
    • டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகியவற்றின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

    இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக இன்றைய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச்சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 829 புள்ளிகள் சரிந்து 79,505 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50, 255 புள்ளிகள் சரிந்து 24,018 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

    அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சரிந்துள்ளன.

    ஆசியன் பெயிண்ட், டாக்டர் ரெட்டி, கோடக் மகேந்திரா வங்கி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் ஆகியவற்றின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதால் பங்குச்சந்தை வரும் நாட்களில் மேலும் சரிவை சந்திக்கும் என முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 

    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது.
    • சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ பங்குகளும் உயர்வு.

    பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தது.

    கடந்த இரண்டு வாரங்களில் ஏழு நாட்கள் சரிவை சந்தித்த பங்குச் சந்தை இன்று ஏற்றத்தை கண்டது.

    கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,212.53 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,343.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 79,341.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,321.88 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது. மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் அறிவிப்பு இந்த உயர்வுக்கு காரணமாகும்.

    555 கோடி ரூபாய்க்கு எஸ்.எம்.எம். இசுசு நிறுவனத்தை கையகப்படுத்தியதாக அறிவித்ததால் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்கு 2.29 சதவீதம் அதிகரித்தது.

    சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ஐசிசிஐ வங்கி நிறுவன பங்குகளும் உயர்வை சந்தித்தன.

    ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது
    • எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகின்றன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 79,830 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது, ஆனால் காலை 11.30 மணிக்கு 1,004 புள்ளிகள் வரை சரிந்து 78,797.39 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 50 24,289 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி, காலை 11.30 மணிக்கு 338 புள்ளிகள் சரிந்து 23,908 புள்ளிகளாகக் குறைந்தது.

    ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை பின்தங்கின. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், எச்.சி.எல் டெக், எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை லாபத்தில் உள்ளன.

    • சென்செக்ஸ் 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி கடந்த 7 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்சென்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 520.90 புள்ளிகள் உயர்ந்து, கடந்த 4 மாதங்களுக்குப்பின் மீண்டும் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்த 80116.49 புள்ளிகளாக இருந்தது.

    இன்று காலை வர்த்தகம் 80,058.43 புள்ளிகளுடன் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,173.92 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 79,724.55 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 315.06 புள்ளிகள் சரிவடைந்து 79,801.43 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 24,246.70 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்.சி.எ். டென்னாலாஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கோடக் மகந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்தூஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவன பங்கு 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தது.

    • கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது.
    • ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிக அளவில் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை 90 நாட்கள் நிறுத்தி வைத்தார். அதன்பின் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது.

    கடந்த 6 நாட்களாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்த நிலையில் இன்று 7ஆவது நாளாகவும் உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. மேலும் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் தற்போது 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் 520.90 புள்ளிகள் உயர்ந்து 80,116.49 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நிறைவடைந்தது.

    ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பங்கு 7.72 சதவீதம் உயர்ந்தது. 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டின் நிகர லாபம் 4307 கோடி ரூபாய் என வெளியிட்டிருந்தது. இதனால் அதன் பங்கு அதிக ஏற்றம் கண்டது.

    டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா கல்சண்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், மாருதி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டனம்.

    கோடக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எஸ்.பி.ஐ. ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் 161.70 புள்ளிகள் உயர்ந்து 24328.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    வெளிநாட்டு நிதி வரவு மற்றும் நேர்மறையான உலகளாவிய டிரெண்ட்ஸ் ஆகியவை பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×