பங்குச்சந்தையில் ரத்தக்களரி.. ரூ.9.7 லட்சம் கோடி இழப்பு - ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

கடந்த ஓராண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82.53 டாலர் வரை உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தையில் ரத்தக்களரி.. ரூ.9.7 லட்சம் கோடி இழப்பு - ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
Published on

இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

சென்செக்ஸ் சுமார் 1,710 புள்ளிகள் சரிந்து 78,529 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த ஓராண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 477 புள்ளிகள் சரிந்து 24,389 என்ற நிலைக்குச் சென்றது.

பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 456.17 லட்சம் கோடியிலிருந்து ரூ. 446.47 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதாவது சுமார் ரூ. 9.7 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.

எண்ணெய் கொண்டு வரும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82.53 டாலர் வரை உயர்ந்துள்ளதால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 92.17 என்ற அளவை தாண்டியுள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பாகும்.  

X

Maalai Malar
www.maalaimalar.com