Iran War | அமெரிக்க பங்குச்சந்தையில் ஒரே மாதத்தில் ரூ.282 லட்சம் கோடி இழப்பு!

ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் இந்த போரால், அமெரிக்க பங்குச்சந்தையில் S&P 500 குறியீட்டு எண் 5.83% வீழ்ச்சியடைந்துள்ளது.
trump
trump
Published on

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதே சமயம் கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் இந்த போரால், அமெரிக்க பங்குச்சந்தையில் S&P 500 குறியீட்டு எண் 5.83% வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் ஒரு மாதத்தில் ரூ.282 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஏற்பட்ட வீழ்ச்சியால் அமெரிக்க பங்குச்சந்தை மதிப்பில் ரூ.94 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com