Iran War | எண்ணெய் சந்தையில் சீர்குலைவு - உலக நாடுகளுக்கு சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை!

மத்திய கிழக்குப் போரால், உலக கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு கண்டிராத மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படக்கூடும் என உலக நாடுகளுக்கு சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
oil
oil
Published on

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதே சமயம் கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மெது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்குப் போரால், உலக கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு கண்டிராத மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படக்கூடும் என உலக நாடுகளுக்கு சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை இயல்பான நிலைக்கு மீட்டெடுக்க 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம் என்பதால், அனைவரும் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு சர்வதேச எரிசக்தி முகமை அழைப்பு விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com