Share Market | கடும் சரிவுக்கு பிறகு... இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியை இந்திய பங்குச்சந்தை சந்தித்தது.
Share Market | கடும் சரிவுக்கு பிறகு... இன்று இந்திய  பங்குச்சந்தைகள் உயர்வு
Published on

இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன. நேற்று கடுமையான சரிவை சந்தித்த நிலையில் இன்று ஓரளவு ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நேற்று கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியை இந்திய பங்குச்சந்தை சந்தித்தது.

இன்று சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்து 78,205 என்ற நிலைக்கு வந்தது. நிஃப்டி சுமார் 233 புள்ளிகள் வரை உயர்ந்து 24,261 புள்ளிகள் என்ற நிலைக்குச் சென்றது.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்ததால் இன்று ஓரளவு உயர்வை சந்தித்துள்ளது.

இன்றைய தினம் , ஜப்பான், தென் கொரியா உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் ஓரளவு உயர்வை சந்தித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com