AI இல்லையா?.. இந்திய பங்குச்சந்தையை புறக்கணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்? - ஒரே மாதத்தில் ரூ.31,000 கோடி ஓவர்!

மார்ச் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் சுமார் ரூ.31,000 கோடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதி சந்தையிலிருந்து வெளியேறியுள்ளது
AI இல்லையா?..  இந்திய பங்குச்சந்தையை புறக்கணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்? -  ஒரே மாதத்தில் ரூ.31,000 கோடி ஓவர்!
Published on

இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) இந்தியாவில் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.

அவ்வாறு நடப்பு மார்ச் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் சுமார் ரூ.31,000 கோடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதி சந்தையிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், உலகளாவிய காரணிகள் சில, முதலீடுகளை பாதிக்கின்றன.

அந்த வகையில் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மற்றும் கடன் பத்திரங்களின் வட்டி உயர்வு, முதலீட்டாளர்களை பாதுகாப்பான அமெரிக்க சந்தையை நோக்கி இழுக்கிறது.

அதேநேரம், தற்போது உலகளாவிய முதலீடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமிகண்டக்டர்கள் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கியே குவிகின்றன.

இதில் இந்தியா பின்தங்கியிருப்பது முதலீட்டாளர்களை இந்திய சந்தையை விட்டு பின்வாங்க வைத்துள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உதாரணமாக தைவானின் டிஎஸ்எம்சி, சாம்சங் போன்ற வெறும் மூன்று செமிகண்டக்டர் நிறுவனங்களில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுமார் 1.75 டிரில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.

ஆனால், ஒட்டுமொத்த இந்தியப் பங்குச்சந்தையிலேயே வெளிநாட்டு முதலீடு வெறும் 750 பில்லியன் டாலர் மட்டுமே ஆகும்.

இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் 'சேவைகள்' சார்ந்தவையாகவே உள்ளன.

தொழில்நுட்பம் அல்லது ஹார்டுவேர் தயாரிப்பில் இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் சுமார் 3.5 லட்சம் திறமையான ஏஐ வல்லுநர்கள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com