என் மலர்tooltip icon

    இந்தியா

    போர் பதற்றம் எதிரொலி: கடும் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை
    X

    போர் பதற்றம் எதிரொலி: கடும் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை

    • ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன
    • கடந்த திங்கள் கிழமை கடும் சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.

    இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

    இன்று சென்செக்ஸ் 1,122 புள்ளிகள் சரிந்து 79,116 என்ற நிலைக்கு வந்தது. இது கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும். நிஃப்டி சுமார் 385 புள்ளிகள் சரிந்து 480 என்ற நிலைக்குச் சென்றது. இதுவும் கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

    ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் கடந்த திங்கள் கிழமை கடும் சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.

    எண்ணெய் கொண்டு வரும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 82 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து ரூபாய் மதிப்பு பலவீனமடைந்துள்ளது.

    அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 92.02 என்ற அளவை தாண்டியுள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே மிகக் குறைந்த மதிப்பாகும்.

    ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் தொடர்வதால் அறம் நாட்களிலும் இந்திய பங்கு சந்தை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×