என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி கார் வெடிப்பு குறித்து அமித்ஷாவை தொடர்பு கொண்டு விசாரித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
    X

    டெல்லி கார் வெடிப்பு குறித்து அமித்ஷாவை தொடர்பு கொண்டு விசாரித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

    • உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.

    கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

    இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று பேசினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.

    Next Story
    ×