என் மலர்
நீங்கள் தேடியது "Delhi Red Fort"
- தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
- சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை உயர்கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.
இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். ஆதாரங்களின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. பரிதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.140 கோடி ஆகும்.
சோதனை நடத்திய 2 மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சித்திக் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பலா அறக்கட்டளை ரூ.110 கோடிக்கும் அதிகமான சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
- டெல்லி கார் குண்டு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
- சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025-ஆம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாதத் தாக்குதலாகும்.
கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று மாலை சரியாக 6.52 மணிக்கு பழைய டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாசல் எண் 1க்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைப் பயன்படுத்தி நடந்த தற்கொலைத் தாக்குதல் நாட்டையே அதிரச் செய்தது.

இந்த கோரச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட கார், அரியானா மாநிலப் பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 ஆகும். இதில் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த 6 கார்கள், 2 ஈ-ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா என சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.
இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.
அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி (Dr. Umar-un-Nabi). இவர் அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா (Al-Falah) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று பிற்பகல் 3:19 மணிக்கே செங்கோட்டைப் பகுதிக்கு வந்த உமர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்துள்ளார். திங்கட்கிழமை என்பதால் செங்கோட்டை மூடப்பட்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை என சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு "White-collar terror" (கல்வி கற்றவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதம்) என பாதுகாப்பு அமைப்புகள் வகைப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் உமருடன் தொடர்புடைய மேலும் சில மருத்துவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கும்பலுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மத்திய அரசு இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்தது. உமர் உன்-நபிக்கு உதவியதாக இன்று கைது செய்யப்பட்ட நபருடன் சேர்த்து இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று பேசினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் இன்று மதியம் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் டெல்லி கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அமித் ஷா, விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்ததாக விபத்து நடந்த இடத்தை அடுத்ததாகப் பார்வையிடவுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல் துறை ஆணையர் சதீஷ் கோல்சாவிடம் அமித் ஷா கேட்டறிந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் முக்கிய இடங்களில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய நகரங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தீவிர சோதனையில் நடத்தப்பட்டு வருகிறது.
- செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது
- மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தொலைபேசி மூலம் வந்த மர்ம அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி செங்கோட்டை மற்றும் ஜமா மசூதி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் வந்த மர்ம அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடியாக சோதனையிட்டனர்,
சோதனையில் எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் அது போலியான அழைப்பு எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் 13-4-1919 அன்று ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வெள்ளையர்களின் ராணுவம் பீரங்கிகளால் சுட்டதில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இவற்றை திறந்துவைத்த பிரதமர் மோடி இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு நினைவுக்குறிப்புகளை சுமார் ஒருமணி நேரம் பார்வையிட்டார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort






