என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு - 8 பேர் உயிரிழப்பு என தகவல்
    X

    டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு - 8 பேர் உயிரிழப்பு என தகவல்

    • செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது
    • மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன

    காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×