search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national war memorial"

    ‘குடும்பமே முதலில்’ என்று சிலர் செயல்படுகின்றனர். ரபேல் விமானங்களை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #Rafale #Congress #Modi #WarMemorial
    புதுடெல்லி:

    டெல்லியில், இந்தியா கேட் வளாகத்தையொட்டி, 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.176 கோடி செலவில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதில், பலியான 25 ஆயிரத்து 942 ராணுவ வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் தங்க எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட ஸ்தூபியும், அணையா தீபமும், இந்திய ராணுவம் ஈடுபட்ட முக்கிய போர்களை விளக்கும் 6 சுவர் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி, இந்த போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை குறிக்கும் வகையில், அவர் தீபத்தை ஏற்றிவைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து ரோஜா பூக்கள் தூவப்பட்டன.



    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினரின் குறைகளை தீர்க்க ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அவர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் அலைய வேண்டியது இல்லை. இந்த நினைவு சின்னம் கட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டும், முந்தைய அரசுகளின் அலட்சியம் காரணமாக தாமதம் ஆனது. இது, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

    படைவீரர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் முந்தைய மன்மோகன் சிங் அரசு அலட்சியம் செய்தது. குண்டு துளைக்காத 1 லட்சத்து 86 ஆயிரம் உடைகள் வாங்க 2009-ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை மன்மோகன் சிங் அரசு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான், 2 லட்சத்து 30 ஆயிரம் உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிலர், ‘குடும்பமே முதலில்’ என்று செயல்படுகிறார்கள். ஆனால், நான் ‘இந்தியாவே முதலில்’ என்று செயல்பட்டு வருகிறேன்.

    ரபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வர விடாமல் தடுக்க சிலர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து பறக்கத் தொடங்கும்போது அவர்கள் வாயடைத்து போவார்கள்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இந்த நினைவு சின்னம், மற்றொரு ஆன்மிக தலமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இங்கு வந்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்” என்று கூறினார்.

    டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று திறந்து வைத்ததுடன் அணையா ஜோதியையும் ஏற்றி வைத்தார். #NationalWarMemorial #Modidedicates #ModidedicatesWarMemorial
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் முக்கிய சின்னமாக அமைந்திருப்பது ‘இந்தியா கேட்’ எனும் பிரம்மாண்டமான நுழைவாயில். பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள முக்கிய சாலையான ராஜ்பாத்தில் அமைந்துள்ள இந்த நுழைவாயில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான  போர் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டது.

    சர் எட்வின் லுத்யான்ஸ் என்பவரால் கட்டப்பட்ட இந்த நினைவிடத்துக்கு அகில இந்திய போர் நினைவுச் சின்னம் என பெயர் வைக்கப்பட்டாலும் அது, இந்தியா கேட் என்றே அழைக்கப்படுகிறது.

    இந்த நுழைவுவாயிலின் தூண்களில் முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த நம் நாட்டின் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ‘அழியாப் புகழ் உடைய போர் வீரர் ஜோதி’ (அமர்ஜவான் ஜோதி) என்ற பெயரில் 1971-ம் ஆண்டு முதல் ஒரு அணையா ஜோதியும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

    இதை விரிவுபடுத்தி, புதுப்பித்து உலக அளவில் ஒரு போர் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1962-ல் நடந்த போருக்குப் பின் கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த இந்தக் கோரிக்கை, கடந்த 1999-ல் நடந்த கார்கில் போருக்கு பிறகு மேலும் வலுப்பெற்றது.

    இதற்கிடையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுன்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    அந்த வாக்குறுதிய நிறைவேற்றும் வகையில் மிக பிரமாண்ட அளவில் இந்த போர் நினைவுச் சின்னம் விரிவுப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததுடன் அணையா ஜோதியையும் ஏற்றி வைத்தார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான முன்னாள், இந்நாள் ராணுவ உயரதிகாரிகள் இந்த திறப்புவிழாவில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘டெல்லியில் மாபெரும் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்தியில் முன்னர் ஆட்சி செய்த அரசு கவனிக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இதற்கான முதல்கட்ட ஏற்பாடுகள் நடந்தன. பின்னர், ஆட்சி மாறியபோது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

    2014-ம் ஆண்டில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் இதற்கான பணிகள் தொடங்கி இந்த போர் நினைவுச் சின்னம் இன்று திறக்கப்படுகிறது. இதை புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வரலாற்று சிறப்புக்குரிய இந்த இடத்தில் இருந்தவாறு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எனது மரியாதைகளை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளுடன் போர் நினைவுச் சின்னத்தில் உள்ள சில வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைடங்களை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி வீரவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின்போது ராணுவப்படையினருக்காக புதிதாக 3 அதிநவீன சிறப்பு மருத்துவ மனைகள் தொடங்கப்படும் எனவும் மோடி அறிவித்தார். #NationalWarMemorial #Modidedicates #ModidedicatesWarMemorial
    ×