search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother son"

    • வெண்ணிலா பாரதியும், வேலுவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • வேலு உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பை சேர்ந்தவர் மாடசாமி மனைவி காந்திமதி (வயது 45). இவரது மகள் வெண்ணிலா பாரதியும், அவரது கணவர் வேலுவும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வெண்ணிலா பாரதியின் ஆண் குழந்தை காந்திமதியின் பராமரிப்பில் உள்ளது. வெண்ணிலா பாரதிக்கும், அவரது கணவர் வேலுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று வேலு, பலவேசகண்ணன், சுரேஷ் உள்பட 4 பேர் காந்திமதி வீட்டிற்கு வந்து குழந்தையை கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் அவரை தாக்கினர். இதனை தடுக்க வந்த காந்திமதியின் மகன் கார்த்திக் மணிகண்டனையும் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேலு உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்லம் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவர் மனைவி உமாதேவி, மகன் செல்லப்பா ண்டியுடன் (27) வசித்து வந்தார். திருமணமாகாத இவர் பெயிண்டராக வேலை பார்த்தார். மதுபோதையில் தாய் உமாதேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இதே ஊரை சேர்ந்த செந்தில்(50) தட்டிகேட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் செல்லப்பாண்டி மற்றும் உமாதேவியை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து செந்திலை கைது செய்தனர்.

    • கணேஷ் வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தாய் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்.
    • ரஸ்தா பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள பட்டவர்த்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி ஆறுமுகம் (வயது45). இவர்களது மகன் கணேஷ் (23).

    பெண் பலி

    இந்நிலையில், கணேஷ் தங்களது வயலுக்கு செல்வதற்காக இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் தாய் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்.அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலை மானூர் ரஸ்தா பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கணேஷ் படுகாயமடைந்தார்.

    டிரைவரிடம் விசாரணை

    தகவலறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சந்திப்பு வீரராகவபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயமானர்.
    • அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 36). இவரது மனைவி சரளா (வயது 27). இவர்களது மகன் அஸ்வந்த் (வயது 4). சம்பவத்தன்று சரளா தனது மகன் அஸ்வந்துடன், தனது தாய் வீடான வில்லியநல்லூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து மனைவி மற்றும் மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.
    • உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள ஆவுடையாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகள் சரஸ்வதி(வயது 20).

    விவாகரத்து

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.

    சரஸ்வதியின் உறவு முறையான ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த மாசானமுத்து (22) மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரது கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

    அரிவாள் வெட்டு

    அதற்கு சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாசானமுத்து, ஆவுடையாள்புரம் மாயாண்டி மனைவி செல்வி (வயது 52), வள்ளியூர் முருகன் மனைவி சுதா(35) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் இசக்கியப்பன், அவரது தாய் அழகு மாடத்தி (75) ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகனை போலீசார் கைது செய்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை குமரன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் மாரிபாண்டி (வயது 36). இவரிடம் மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்தவர் கணேசன்(42) என்பவர் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கிடையில் மாரிபாண்டிக்கும், கணேசன் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவர, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

     இந்தநிலையில் நேற்று மாரிபாண்டி கொடுத்த கடனை வாங்குவதற்காக மானாமதுரை சென்றுள்ளார். அப்போது கணேசனும், அவரது தாயார் காயாம்பு(62) ஆகியோர் சேர்ந்து மாரிபாண்டியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், காயாம்பு ஆகியோரை கைது செய்தனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே கடைக்கு சென்ற இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்று கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகள் ரோபனா (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (22) அங்கு வந்தார். அவர் திடீரென ரோபனாவின் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த ரோபனா அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். இது குறித்து வேல்முருகனின் தாயார் ஜெயாவிடம் கூறினார்.ஆனால் ஜெயா தனது மகனை கண்டிக்கவில்லை. அவர் வேல்முருகனுடன் சேர்ந்து கொண்டு, நடந்த விவரங்களை வெளியில் கூறினாள், உன்னை கொலை செய்து விடுவோம் என்று கூறி ரோபனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட ரோபனா வீட்டில் தனியாக இருக்கும்போது வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ஜெயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×