கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயம்

கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயமானர்.அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர் அருகே தாய், மகன் திடீர் மாயம்
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 36). இவரது மனைவி சரளா (வயது 27). இவர்களது மகன் அஸ்வந்த் (வயது 4). சம்பவத்தன்று சரளா தனது மகன் அஸ்வந்துடன், தனது தாய் வீடான வில்லியநல்லூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து மனைவி மற்றும் மகன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தையை உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com