தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு

சோழவந்தான் அருகே தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்லம் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவர் மனைவி உமாதேவி, மகன் செல்லப்பா ண்டியுடன் (27) வசித்து வந்தார். திருமணமாகாத இவர் பெயிண்டராக வேலை பார்த்தார். மதுபோதையில் தாய் உமாதேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இதே ஊரை சேர்ந்த செந்தில்(50) தட்டிகேட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் செல்லப்பாண்டி மற்றும் உமாதேவியை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து செந்திலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com