என் மலர்
இந்தியா

CRPF பணிக்கு தேர்வான மகன்.. தெருவோரம் காய்கறி விற்கும் தாயிடம் சென்று கூறிய நெகிழ்ச்சி தருணம் வைரல்
- குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒரு நிலைக்கு வரும்போது எந்தத் தாய்க்கும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற இளைஞர், அத்தகைய ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
கோபால் சாவந்த் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
தனக்கு வேலை கிடைத்த செய்தியைத் தாயிடம் சொல்ல கோபால் அவர் கடை வைத்திருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்றார்.
தாய் காய்கறி விற்றுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற கோபால், தனக்கு CRPF வேலை கிடைத்த விவரத்தைக் கூறினார். இதைக் கேட்டதும் அந்தத் தாய் தனது மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
வறுமை சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பது கோபால் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.






