திசையன்விளையில் தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு-உறவினர் கைது

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார். உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார்.
திசையன்விளையில் தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு-உறவினர் கைது
Published on

திசையன்விளை:

உவரி அருகே உள்ள ஆவுடையாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மகள் சரஸ்வதி(வயது 20).

விவாகரத்து

இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சரஸ்வதி தனது தாயார் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.

சரஸ்வதியின் உறவு முறையான ஏரல் பெருங்குளத்தை சேர்ந்த மாசானமுத்து (22) மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரது கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

அதற்கு சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாசானமுத்து, ஆவுடையாள்புரம் மாயாண்டி மனைவி செல்வி (வயது 52), வள்ளியூர் முருகன் மனைவி சுதா(35) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் இசக்கியப்பன், அவரது தாய் அழகு மாடத்தி (75) ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்தார். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com