என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் கைது
    X

    பாகிஸ்தான் உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் கைது

    • பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு.
    • பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்றதை என்ஐஏ கண்டுபிடித்தனர்.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மத்திய உளவுத்துறை, பாகிஸ்தானுக்கு ராணுவம் குறித்த தகவல்களை ரகசியமாக வழங்கியவர்களை கண்டுபிடித்து கைது செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மோதி ராம் ஜாட் என்ற சிஆர்பிஎஃப் வீரரை தேசிய பாதுகாப்பு அமைப்பு (NIA) கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் புலனாய்வுத்தறை அதிகாரிகளுக்கு (PIOs) இவர் ராணுவம் குறித்த முக்கிய தரவுகளை பகிர்ந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து உளவுப்பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல வழிகளில் இருந்து பணம் பெற்றுள்ளார். இதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் மோதி ராம் ஜாட்டை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் மாதம் வரை என்ஐஏ விசாரணைக்கு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    Next Story
    ×