search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CISF"

    • 48 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
    • மார்ச் 7-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

    சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் அந்ததந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்மறு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு நேற்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

    • டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
    • தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது

    கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.

    அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

    தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.

    விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.

    சென்னை ஐகோர்ட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கோர்ட்டு அறையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி மதுரையை சேர்ந்த வக்கீல்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்போதைய தலைமை நீதிபதியும், தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான சஞ்சய்கி‌ஷன் கவுல், இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

    பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. பின்னர், ஐகோர்ட்டுக்கு தமிழக போலீசாரால் உரிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை. அதனால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர். இதற்காக ஆண்டுக்கு ரூ.64 கோடியை தமிழக அரசு, மத்திய பாதுகாப்பு படையினருக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 16ந்தேதி முதல் ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த பாதுகாப்பை ஒவ்வொரு ஆண்டும் நீட்டித்து ஐகோர்ட்டு முதல் அமர்வு உத்தரவிட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வழங்கி வரும் பாதுகாப்பை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து உத்தரட்டனர். #MadrasHC
    ×