பேரனை அடித்ததால் மகனை ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட தாத்தா.. அதிரடி கைது

பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.
பேரனை அடித்ததால் மகனை ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட தாத்தா.. அதிரடி கைது
Published on

மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பேரனை அடித்ததற்காக மகனை தாத்தா ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர், வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார்.

நாகபூரில் சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், நேற்று இரவு 4 வயதான தனது பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, முதியவர் லைசன்ஸ் பெற்று தான் வைத்திருந்த ரைஃபிள் துப்பாக்கியால் மகனை நோக்கி சுட்டுள்ளார்.

இதனால் மகனின் காலில் குண்டு பாய்ந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.காலில் குண்டு பாய்ந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com