search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street vendors"

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளை மத்திய நிதி மந்தரி வழங்கினார்.
    • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக விருதுநகர் வந்த நிர்மலா சீதாராமனை கலெக்டர் ஜெயசீலன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 1,297 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் கடனு தவி வழங்கி பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி உதவிக்காக காத்திருக்கும் கடைக்கோடி ஏழைக்கும் உதவி சென்ற டைய வேண்டும் என திட்ட மிட்டார். ஏழை, எளிய மக்கள் உதவி பெறுவது அவர் கள் உரிமை என்ற அடிப்ப டையில் உதவி கிடைப்பதன் மூலம் அவர்கள் சுய சார்பு பெறும் தன்மை ஏற்படும் என்பதே பிரதமரின் திட்டமாகும்.

    அந்த வகையில் அவர் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறி வித்தார். கடந்த 2020-ம் ஆண்டு சாலையோர வியா பாரிகளுக்காக திட்டம் தொடங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படு கிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி முடித்தால் ரூ. 20 ஆயிரமும், அதன் பின்னர் ரூ.50, ஆயிரமும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் தவணையாக 7,772 சாலையோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது தவணையாக 1,642 பேருக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது தவணை யாக 246 பேரும் ரூ.50 ஆயிரமும் பெற்றுள்ளனர்.

    இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது.

    தனிநபர் கடன் கொடுப்பதை அரசு தடுக்க முடியாது. அதற்காகத்தான் அரசே கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில். நிதித்துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி பேசினார். நிதித்துறை இணை செயலாளர் பர்ஷாந்த் குமார் கோயல் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீ வஸ்தவா வரவேற்றார்.

    இதனைத்தொடர்ந்து 10 மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுடன் மேடைக்கு அழைத்து சந்திரயான் விண்கல மாடலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தார்.

    • சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • புதியதாக கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக் கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் புதியதாக கடனுதவி பெறும் பயனாளி களுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் அனைத்து வங்கிகள் மூலம் கடன் தொகை விண்ணப்பித்த அன்றே வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 402 சாலை யோர வியாபாரிகள் பயன்பெற்று உள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதிக ளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிக ளுக்கும் அனைத்து வங்கி களும் கடனுதவி வழங்க வேண்டும். கடனுதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தாமல் விண்ணப் பித்த அன்றே கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும். வங்கி கள் பொறுப்பு அலுவலர் களை நியமித்து கடனுதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. வருகிற 1-ந்தேதி சாலை யோர வியாபாரி களுக்கான சிறப்பு கடன் மேளா தமுக்கம் மைதா னத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், சிவசுப்பிரமணியன், கோபால், சுகாதார ஆய்வாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×