search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Ayodhya Ram Temple"

  • அயோத்தியில் ராமர் கோவிலில் கடந்த ஜனவரியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • இதையடுத்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

  லக்னோ:

  அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

  இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

  மேலும் பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.

  இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு இன்று சென்றார். அங்கு பால ராமரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

  இதுதொடர்பான புகைப்படங்களை கோவில் பூசாரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

  • ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா விளக்கம்.
  • ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

  உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  அதன் மறுநாள் முதல் பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் நேற்று வரை ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியிருப்பதாவது:-

  ரூ. 25 கோடியில் காசோலைகள், வரைவோலைகள் மற்றும் கோயில் அறக்கட்டளை அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் நன்கொடை பெட்டிகளில் டெபாசிட் செய்யப்பட்டவை அடங்கும்.

  இருப்பினும், அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது.

  ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

  ராமர் பக்தர்களின் பக்தி என்னவென்றால், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பயன்படுத்த முடியாத வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை ராம் லல்லாவுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். 

  இருப்பினும் பக்தர்களின் பக்தியைக் கருத்தில் கொண்டு, ராம் மந்திர் அறக்கட்டளை தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகள், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது.

  அயோத்தியில் வரும் ராம நவமி பண்டிகை நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகையால் நன்கொடைகள் அதிகரிக்கும் என்று கோயில் அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

  ராம நவமியின் போது அதிக அளவில் பணம் வருவதையும், எதிர்பார்க்கப்படும் பிரசாதத்தையும் கட்டுப்படுத்த ராம் ஜென்மபூமியில் நான்கு தானியங்கி உயர் தொழில்நுட்ப எண்ணும் இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிறுவியுள்ளது.

  "ராமர் கோவில் அறக்கட்டளை மூலம் ரசீதுகளை வழங்க அறக்கட்டளை மூலம் ஒரு டஜன் கணினி மயமாக்கப்பட்ட கவுன்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

  மேலும், கூடுதல் நன்கொடை பெட்டிகள் ராமர் கோவில் அறக்கட்டளையால் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
  • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பின் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியா அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் காத்திருக்கவும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டது.

  அதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர புஷ்கர் சிங் தாமி தனது மந்திரிசபை மந்திரிகளுடன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று உத்தரகாண்டில் இருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டனர். அப்போது ஜெய் சிய ராம் என முழங்கினர்.

  • உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
  • கடந்த மாதம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

  புதுடெல்லி:

  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.3,000 கோடி செலவில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி அந்த ஆலயத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

  பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் வடமாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையே, ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சத்யபால்சிங், பிரதாப் சந்திரா சாரங்கி, சிந்தோர் பாண்டே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேல்-சபையில் எம்.பி.க்கள் கே.லட்சுமணன், சுதன்ஷூ திவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.

  இதற்கிடையே இன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

  இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

  அப்போது பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்யபால் சிங், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்தது, கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ராமர், இந்துக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சொந்தமானவர். ராமரை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது என தெரிவித்தார்.

  • தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
  • சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  திருப்பதி:

  அயோத்தி ராமரை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

  தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த அயோத்தி கோவில் தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

  பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பி தரிசனம் வைப்பது குறித்து திருப்பதி, சபரிமலை மற்றும் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

  சில நாட்களில் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக தினமும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் அவர்களின் வாகனங்களை போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத இடங்களில் பார்க்கிங் செய்வது, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.


  விரைவில் திருப்பதிக்கு வர உள்ள அயோத்தி தீர்த்த அறக்கட்டளை அதிகாரிகள் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்கள் மற்றும் உணவு தயாரிக்கும் சமையலறை, பிரசாதம் விநியோகிக்கும் முறைகள் மேலும் மலைப்பாதையில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

  இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

  இதையடுத்து சபரிமலைக்குச் சென்று பார்வையிட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பெண் கோவா செல்ல திட்டமிட்டு புறப்பட இருந்த ஒருநாளைக்கு முன்னர் தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேதனை அடைந்த பெண் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்ணும், ஆணும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி தேனிலவுக்கு எங்கும் செல்லாத நிலையில், கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்வார் என்று அப்பெண் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது கணவர் தனது பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று கூறி அதை நிராகரித்துள்ளார்

  இந்நிலையில், அத்தம்பதி தேனிலவுக்காக கோவா செல்ல திட்டமிட்டு ஏற்பாடுகளையும் செய்த நிலையில், திடீரென கணவரின் தாய் அயோத்தியில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டைக்கு முன் அந்த இடங்களுக்கு செல்ல விரும்புவதாகக் கூறி அயோத்தி மற்றும் வாரணாசிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

  இதனையடுத்து அப்பெண் கோவா செல்ல திட்டமிட்டு புறப்பட இருந்த ஒருநாளைக்கு முன்னர் தான் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த அந்த பெண் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

  இந்நிலையில், அயோத்தி மற்றும் வாரணாசியில் இருந்து தம்பதியும் அவரது மாமியாரும் திரும்பி வந்து பத்து நாட்களுக்குப் பிறகு அப்பெண், கடந்த வாரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  • அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  • 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.

  கும்பகோணம்:

  கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

  பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: -

  அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்துக்களை நாங்கள் தான் வளர்த்தோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்துக்கள் தாங்களாகவே வளர்ந்தார்கள்.


  மனைவியை கூட கவனிக்க முடியாத பிரதமர், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறு. அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • ராமர் கோவில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
  • பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

  புதுடெல்லி:

  அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

  இந்த நிலையில் ராமர் கோவில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

  ஜனவரி 22-ந்தேதி (நேற்று) அயோத்தியில் என்ன பார்க்கப்பட்டதோ அவை பல ஆண்டுகள் நமது நினைவுகளில் பொறிக்கப்படும்.

  இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

  அத்துடன் பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

  • தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள்.
  • பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள்.

  சென்னை :

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கவர்னராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

  காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் கவர்னர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கவர்னர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

  தமிழ்நாட்டில் எந்தக் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோவில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோவில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோவிலில் போய் கவர்னர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

  தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.

  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர்.
  • தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

  சென்னை :

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  லட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன கழகத்தின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க திராவிட இயக்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள கொள்கை எதிரிகளும் தங்களுக்கேயுரிய கேவலமான உத்தியான வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டனர்.

  ராமர் கோவில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

  ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.

  அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்