search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2024 ஜனவரி 14-ந்தேதி அயோத்தி கோவிலில் ராமர் சிலைநிறுவப்படும்: ராமஜென்மபூமி அறக்கட்டளை தகவல்
    X

    2024 ஜனவரி 14-ந்தேதி அயோத்தி கோவிலில் ராமர் சிலைநிறுவப்படும்: ராமஜென்மபூமி அறக்கட்டளை தகவல்

    • ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும்.
    • டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

    லக்னோ :

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தநிலையில், ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும். வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×