என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்

    • சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதனால் காலை, மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதனால் காலை, மாலை வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாமக்கல் பஸ் நிலைய பகுதியில் பொக்லைன் கொண்டு குழிகள் தோண்டப்படுவதால், பஸ்களும், இதர வாகனங்க ளும் செல்ல முடியாமல் நீண்ட தொலைவுக்கு நிற்கின்றன.

    அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதுபோல நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முதல் நல்லிபாளையம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் சாலையில் ஒரு புறமாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் காணப்படுகிறது.

    இந்த பணிகளை மேற்கொண்டுள்ள சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை நகராட்சி நிர்வாகத்தி னர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலை, மாலை வேலைகளிலும் உரிய ஏற்பாடுகளுடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×