கடலூரில் இன்று பரபரப்பு: தனியார் கம்பெனி ஊழியர் சாவு-உறவினர்கள் சாலை மறியல்

ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலை முன்பு இறந்த போன நபருடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்
கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலை முன்பு இறந்த போன நபருடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்
Published on

கடலூர்:

கடலூர் அருேக காரைக்காடு சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந் தேதி வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஏழுமலை திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஏழுமலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இறந்த ஏழுமலை உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி முன்பு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடலுடன் உறவினர்கள் கடலூர் - சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் புகார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com