நெல்லை டவுனில் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர்.
றியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
றியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை டவுன் ஆர்ச் அருகே மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கடைகள்

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போஸ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போது அங்கிருந்த கடைகளை 3 இடங்களில் தற்காலிகமாக மாற்றினர். அதன் ஒரு பகுதியாக சில கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட தொடங்கியது.

பள்ளி கட்டிடத்தை சுற்றி காம்பவுண்டு கட்டப்படாத நிலையில், கடைகளுக்கு இரவு நேரங்களிலும் ஆட்கள் வந்து சென்றனர்.

இந்த கடைகளால் பள்ளி மாணவர்கள் விளை யாடுவதற்கும் இடம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் புகார்

இந்நிலையில் கடை களுக்கு இரவு நேரங்களில் வருபவர்களில் சிலர் மது அருந்தி விட்டு பாட்டில்களை பள்ளி வளாக பகுதிகளில் வீசி செல்வதாகவும், அது மாணவர்களின் கால்களில் குத்தி காயப்படுத்து வதாகவும் மாணவர்கள் புகார் கூறினர். எனவே பள்ளி கட்டி டத்தை சுற்றி காம்பவுண்டு அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி எஸ்.என்.ஹைரோட்டில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை விளக்கி கூறினர். உடனடியாக இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம், போலீஸ் துணைகமிஷனர் சரவணகுமார் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அதிகாரி லெனின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது பள்ளி கட்டி டத்தை சுற்றி தகரத்தால் அடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com