என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்
    X

    அரசு பள்ளி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை அடுத்துள்ள ஆமணக்கு நத்தத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்தப்பள்ளியில் போதிய வசதிகள் செய்யப்படாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமமடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும், மரத்தடியில் மாணவ-மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்துவதாகவும், பள்ளி வளாகத்திலேயே சுகாதாரமற்ற முறையில் சத்துணவு சமைத்து வினியோகிப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து இன்று காலை வகுப்புகளை புறக்கணித்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி முன்புள்ள பந்தல்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×