search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case against farmers"

    • பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும்.
    • பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு உள்ளடக்கிய 1,000 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கினர்.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இணைக்க கோரி திடீரென்று சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அதி காரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாப்பாடு செய்து சாலையில் போட்டு உணவு அருந்தி நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில்பெரும் பரபரப்புஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அம்பலவாணன் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்ப ட்ட விவசாயிகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்தால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

    ×