search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blackout"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம், கீழக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருஉத்தரகோசமங்கை பீடரில் நாளை (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டினம்காத்தான், உச்சிப்புளி, பனைக்குளம், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டினம்காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான் குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர். எஸ். மடை, ஆதம் நகர், திருஉத்தரகோசமங்கை, களரி, வெள்ளா, வேளானூர், குளபதம், மோர்க் குளம், நல்லாங்குடி, எக்ககுடி, மேலச்சீத்தை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு பாகல்மேடு ஊராட்சி மற்றும் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சத்தியவேலு தலைமை தாங்கினார். அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரமணிகண்டன் வரவேற்றார்.

    இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிலையில், பாகல்மேடு ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மாநில அயலக அணி துணைச்செயலாளர் ஜி.ஸ்டாலின், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் அன்பு உதயகுமார் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் காரில் வந்து மேடை அருகே இறங்கினார்.

    அப்பொழுது அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் மேடைக்கு அருகே நின்று கொண்டு நிர்வாகிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் மின்சார சப்ளை செய்யாததால் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு செல்லலாம் என்று கூறியவண்ணம் பரிதவித்துக் கொண்டிருந்தார். இதன் பின்னர், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிவிட்டு புறப்பட்டார். அப்பொழுது மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் மேடையில் ஏறி 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிவிட்டு மீண்டும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மற்றொரு கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இப்பிரச்சினையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணி காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் உள்ள நாகை ரோடு, திருவள்ளுவர் நகர், சேவியர் நகர் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது.
    • இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது.

    கடலூர்:

    வடலூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்துவருகிறது, வடலூர் பகுதியில் மிக தாமதமான மழையால், சம்பா நெற்பயிர்கள் சாகுபடி மிக தாமதமாகவே நடந்து வருவதுடன், இப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர்வர தொடங்கி உள்ளது, தொடர்ந்து பெய்த கன மழையால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

    • ரகுநாதபுரம், ஆர்.எஸ். மடை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) வெளியிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம்,கழுகூரணி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை (3-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×