என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவொற்றியூர்"

    • எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை என அசைவப் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    சென்னை திருவொற்றியூரின் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடு, கோழி, மீன், இறால், கருவாடு, முட்டை என அசைவப் படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    அசைவப் படையலை சாப்பிட்டால் நோய்நொடி நீங்கும் என்ற நம்பிக்கையால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் படையலை வாங்கி சென்றனர்.

    • வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படுகிறது
    • வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு செய்யப்பட்டது

    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.

    வள்ளலார் வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.

    கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.

    இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடலில்

    ?வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்

    ?ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா

    ?வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என

    வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,

    மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார். 

    • இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி 76 கடிதங்களை எழுதி உள்ளேன்.
    • மீனவர்களுக்கான அதிக திட்டங்களை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.

    சென்னை திருவொற்றியூரில் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த ரூ. 46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    * 1 லட்சத்து 20 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.1528 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    * மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை காக்கவே கச்சத்தீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றினோம்.

    * இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி 76 கடிதங்களை எழுதி உள்ளேன்.

    * இதுவரை ஆயிரத்து 300 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    * தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    * தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி.

    * படகுகள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    * மீனவர்களுக்கான அதிக திட்டங்களை செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.

    * மீனவர்களுக்காக இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 400 படகுகள், 250 ஃபைபர் படகுகளை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும்.

    சென்னை திருவொற்றியூரில் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 400 படகுகள், 250 ஃபைபர் படகுகளை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    * பாரம்பரிய உரிமைகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும்.

    * மீனவர்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக தி.மு.க. அரசு இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.
    • பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.

    திருவொற்றியூருக்கு வாருங்கள்

    சென்னையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது.

    பிரளயத்தை மேலே வராமல் தடுத்ததால் இந்த ஊர் ஒற்றியூர் எனப்படுகிறது.

    அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்ற புகழ் கொண்டது இத்தலம்.

    பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும்.

    கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும்.

    கலையழகும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது.

    சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது.

    "ஒற்றியூர் தொழ தொல்வினையும் ஓயும்" என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்புடைய திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் ஈசனை வழிபட்டு புண்ணியத்தையும் பெற்று வரலாம்.

    அதற்கு உங்களுக்கு உதவும் வகையில் மாலைமலர் இந்த தொகுப்பை தருகிறது.

    இதில் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பழமை சிறப்பு, ஆலய அமைப்பு சிறப்பு, சன்னதிகள் சிறப்பு மற்றும் வழிபாட்டு பலன்களை தொகுத்து கொடுத்துள்ளோம்.

    படித்து, வழிபட்டு அருள்மிகு தியாகராஜரின் அருளையும், வடிவுடை அம்மனின் கருணையையும் பெற வாழ்த்துக்கள்.

    • ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.
    • இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

    திருவொற்றியூர் கோவில்-படம் பக்க நாதர்

    ஆதிசேஷன் என்னும் நாகராஜன் ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்றான்.

    இந்த ஆலயத்திற்கு அந்த நாகராஜன் வந்து ஈசனை வணங்கி வரங்களைப் பெற்றான்.

    அதனால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு படம் பக்க நாதர் என்ற மூலஸ்தானப் பெயரும் உண்டு.

    இங்கு ஈஸ்வரன் ஆலயத்தின் பிரகாரங்கள் முழுவதும் லிங்க வடிவமாக காட்சி தருகிறார்.

    இந்த ஆலயம் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தொண்டுகள் பல புரிந்து சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தினடியில் திருமணம் புரிந்து ஈசனின் அருளைப் பெற்ற சிறப்புமிக்க தலமாகும்.

    இந்த ஆலயத்தில் பல நாயன்மார்களும், நால்வர்கள் மற்றும் அடியவர்களும் விஜயம் செய்து பாடல்களும், தொண்டுகளும் செய்து இறைவன் அருளைப் பெற்றனர்.

    • இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.

    திருவொற்றியூர் கோவில்-நந்தி தீர்த்தம்

    இந்த ஆலயத்தின் உள்ளே இருப்பது நந்தி தீர்த்தம் என்றும் வெளியே இருப்பது பிரும்ம தீர்த்தக் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலய திருக்குளத்தின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மதுரையையும், கோவலனையும் இழந்து கண்ணகி சினத்துடன் வந்து இறைவனிடம் தாகம் தணிய நீர் கேட்டவுடன் சிவனால் அருந்தச் சொன்ன திருக்குளமும் இதுதான்.

    இந்த ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனாக கண்ணகி புற்றிடம் கொண்ட ஈசனுக்கு வடக்கே பளபளப்புடன் இருக்கும் ஆதி லிங்கத்தைத் தரிசிப்பதைக் காணலாம்.

    கார்த்திகை பவுர்ணமிக்கு அடுத்த இரண்டு நாட்கள் புற்றில் சாற்றிய கவசத்தினை அகற்றி விடுவார்கள்.

    அந்த நாட்களில் புற்றாகவே உள்ள மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம்.

    சுவாமிக்கு ஆதிபுரீஸ்வரர், மாணிக்கத் தியாகர், தியாகேஸர், எழுத்தறியும் பெருமான் என்று பல பெயர்கள் பல உண்டு.

    ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத் தியாகர் என்ற பெயர் வந்தது.

    அம்பாள் வடிவுடையம்மன், வடிவாம்பிகை என்ற பெயர்களுடன் தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார்.

    இங்கு விநாயகர், சுப்பிரமணியர், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், நால்வர் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர்), சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

    பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, வசந்தோற்சவம் மற்றும் மாசில மா பவுர்ணமி தீர்க்க விழாவையட்டி 10 நாட்கள் விழா நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் மகிழடி சேவை பிரசித்தி பெற்றதாகும்.

    பவுர்ணமி நாளன்று மேலூர் அம்பாளையும், ஒற்றியூர் வடிவாம்பிகையையும், திருமுல்லைவாயில் அம்பாளையும் தரிசித்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.

    சுக்கிர தசை, புக்தி நடைபெறுபவர்கள்இங்கு வழிபாடு செய்தால் மேலும் வளம் பெறலாம்.

    சுக்கிர தோஷமுள்ளவர்கள் ப்ரீதி செய்து கொள்ளலாம்.

    • திருவொற்றியூர் ஆலயம் தொன்மை மிக்கது.
    • இதனால் கல்திரை போட்டு ஆதிபுரீஸ்வரர் சன்னதி மறைக்கப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் ஆலயம்-அருவம் ,உருவம் மற்றும் அருவுருவமாய் விளங்கும் இறைவன்

    திருவொற்றியூர் ஆலயம் தொன்மை மிக்கது.

    இங்கு ஆதி பிரமனுக்குப் படைப்புத் தொழிலைத் தொடங்க அனுமதித்த ஆதிபுரீஸ்வரர் அக்னிவடிவில் அருவ நிலையில் இருக்கிறார்.

    இதனால் கல்திரை போட்டு ஆதிபுரீஸ்வரர் சன்னதி மறைக்கப்பட்டுள்ளது.

    நந்தி தேவருக்காக சிவபெருமான் அன்னையை தன் அருகில் அமர்த்தி நடனம் புரிந்த காட்சி தந்த தியாகராஜர் உருவநிலை கொண்டு அருளாட்சி புரிகிறார்.

    வாசுகி என்ற சர்ப்பம் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று பூசித்த சுயம்பு வடிவான லிங்கத்தில் அருவுருவ நிலையில் நகருணை புரிகிறார்.

    இவ்வாறாக திருவொற்றியூரில் இறைவன் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறார்.

    • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.
    • ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    திருவொற்றியூர் ஆலயம்-பூவுலக சிவலோகம்

    படை வளம் செறிந்த பாடல் 274 திருக்கோவில்களில் தொண்டை நாட்டில் 32 திருத்தலங்கள் உள்ளன.

    அதில் பெரும் புகழ்பெற்று, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

    பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

    முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

    ஆகம விதிப்படி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

    கோவிலில் நுழைந்ததும் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காண்கிறோம்.

    இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் சிறப்புற நடப்பதால் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

    இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

    உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

    • ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் சிறப்பு பெற்றது இக்கோவில்.
    • பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    திருவொற்றியூர் ஆலயம்-பஞ்சபூத லிங்கங்கள்

    மண்ணுக்கு சோமசுந்தர் கோவிலும், விண்ணுக்கு ஆகாசலிங்கமும், நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும், காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும், வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்தத் திருக்கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    ஆஞ்சநேயர்

    கோவில் தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல் இவர், நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.

    • நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இருவர் உள்ளனர்.
    • நந்தி தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்த குளங்கள் உள்ளன.

    இரட்டை சிறப்பு பெற்ற திருவொற்றியூர் தலம்

    பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும் யாவும் இங்கு இரட்டை சிறப்புகளாக அமைந்திருக்கிறது.

    இங்குள்ள இரண்டு விருட்சம் அத்தி, மகிழம் , இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் , இரண்டு அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்ட பாறையம்மன்,

    இரண்டு விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர், இரண்டு முருகர், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர், இரண்டு நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர்,

    திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம் வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.

    பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்ட பாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலி செய்வார். இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனிபெருமையன்றோ?

    • மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.
    • தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    மறைமலை அடிகளின் வயிற்றுவலியை தீர்த்த திருவொற்றியூர் முருகபெருமான்!

    தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

    சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் தந்தார்.

    தமக்கு உற்றநோய் நீங்குமாறு திருவொற்றியூரில் திருக்கோவில் கொண்டு, அருணகிரிக்கும், ராமலிங்கருக்கும் அருளிய முருகபெருமானை வேண்டி புதிருவொற்றி முருகர் மும்மணிக் கோவையை பாடினார்.

    தமிழ் தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    இம்முருக பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்து அருள்பாலித்து வருகிறார்.

    ×