என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvottiyur"
- வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படுகிறது
- வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.
வள்ளலார் வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
இந்நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது திராவிட மாடலில்
?வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
?ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
?வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
வடசென்னை பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஏ.ஜி.மவுரியா தொகுதி முழுவதும் எளிமையான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர் குப்பம், மார்க்கெட் காலடிப்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்த மவுரியா அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி கேட்டறிந்தார்.
தெற்கு பகுதியில் இருந்து வரும் ரெயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வதுபோல, வடக்கில் இருந்து வரும் ரெயில்கள் திருவொற்றியூரில் நிற்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
டார்ச் லைட் சின்னத்துடன் ஆடம்பரமின்றி மவுரியா எளிமையாக பிரசாரம் செய்வது மக்களை கவர்ந்துள்ளது. #LokSabhaElections2019 #MNM






