என் மலர்
நீங்கள் தேடியது "வள்ளலார் தினம்"
- கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர் என்று வள்ளலார் கூறினார்.
- சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது என்று வள்ளலார் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் மருதூரில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி அருட்பிரகாச வள்ளலார் பிறந்தார். இவருடைய பெற்றோர் ராமையாபிள்ளை-சின்னமையார் ஆவார். அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகள்.
வள்ளலார் பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். அதன்பின் தாய் சின்னமையார் வள்ளலார் மற்றும் அவருடன் பிறந்த 4 பேரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். வள்ளலார் தமது ஆசிரியராகிய காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி கற்றார்.
வள்ளலார் இடையில் அணியும் ஆடையை முழங்கால் மறையும் அளவுக்கு அணிவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தி இருப்பார். தலை முழுவதும் முக்காடு அணிந்திருப்பார். வள்ளலார் எப்போதும் கைகட்டி கொண்டே இருப்பார். சில நாட்களில் தூய வெண்ணிற ஆடையை உடுத்தி வந்தார். வாடிய பயிரை கண்டு வாடினார். இளைத்த விலங்குகளை கண்டு இளைத்தார். மக்கள் முகங்களில் இளைப்பை கண்டபோது மயங்கினார். பிறர் கண்ணீர் வடிப்பதை பார்த்து தாமும் கண்ணீர் வடித்தார். அனைவரிடமும் இரக்கம் காட்டுவது தான் வள்ளலாரின் ஜீவகாருண்யம்.
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதியர். உயிர் பலி கூடாது. புலால் உண்ண கூடாது. ஏழைகளின் பசி தவிர்த்தல் ஆகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல், சாதி, சமயம் முதலிய எவ்வித வேறுபாடும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கைகொள்ள வேண்டும் என்பன வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை ஆகும்.
ஜாதி,மத,சமய,சாஸ்திர,கோத்திர சண்டையில் ஈடுபட்டு அலைந்து வீணாக அழிவது அழகல்ல என்றார் வள்ளலார்.வருணம், ஆசிரமம், ஆச்சாரம் இவைகள் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடினார் வள்ளலார்.வேதம், ஆகமம், புராண, இதிகாசம் இவைகள் சொல்கிற நெறிகள் அனைத்தும் சூது என உணர வைத்தாயே என அவர் பாடினார்
'உருவமாகியும், அருவமாகியும், அரு உருவமாகியும் கடவுள் ஒருவரே' உள்ளார். கடவுள் ஒருவர் தான் என்று வள்ளலார் கூறினார். அவர் கடவுளை அருட்பெருஞ்ஜோதியாக கண்டார். அருட்பெருஞ்ஜோதி வழிபாடு எந்த சமயத்திற்கும் பொருந்துவது. 1874-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அன்று தமது திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆனார்.
- சோழவந்தான், வாடிப்பட்டியில் வள்ளலார் தினம் கொண்டாடப்பட்டது.
- இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் சன்மார்க்க சங்கம் சார்பாக வள்ளலார் பிறந்த தின விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புஷ்பலதா மணிகண்டன் ஜோதி விளக்கேற்றினார். வள்ளலார் படம் அலங்கரிக்கப்பட்டு சன்மார்க்க சங்கத்தினர் நகர்வலம் வந்தனர். அகழ் பாராயணம் நடந்து வள்ளலாரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் கம்பம் மொக்கச்சாமி பக்தி சொற்பொழிவாற்றினார். சன்மார்க்க சங்கத்தின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார்.
செயலாளர் நல்லுச்சாமி, இணைச் செயலாளர் நாகையா, ஆலோசகர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜோதி வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அய்யப்பன் கோவிலில் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக அன்ன தானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்ட மடக்கி கண்மாய்கரையில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையடிவாரத்தில் 36 அடி உயர லிங்கவடிவிலான அண்ணாமலையார் கோவிலில் வள்ளலார் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவை யொட்டி ராமலிங்கவள்ளலாருக்கு திருவருட்பா பாடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்தபூஜைகளை மிளகாய்பொடி சாமியார் அங்க முத்து, கிருஷ்ணன் ஆகியோர் செய்தனர். இந்தவிழாவிற்கு மனவளக்கலை மன்ற தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். உலக நலசத்தியஞான சித்தாந்தசபை நிர்வாகி பழக்கடைபாண்டி முன்னிலை வகித்தார். ஜோதிடர் ஆனந்தன் வர வேற்றார். அண்ணா மலை யார் கோவில் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜேஸ்வரி கோபிநாத் அன்னதானம் வழங்கினார். இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-
வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் உள்பட அனைத்து பார்களும் கண்டிப்பாக மூடப்பட்டு 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






