search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvottiyur"

    • வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும்

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோவில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள மூலவர் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் தங்கநாக கவசம் அணிந்த நிலையில் காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபத்தை யொட்டிய 3 நாட்கள் மட்டும் மூலவர் ஆதிபுரீஸ்வரருக்கு தங்க நாக கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு புணுகு, சாம்பி ராணி, தைல அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசம் இன்றி வழிபட முடியும் என்பதால் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    நேற்றுமுன்தினமும், நேற்றும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி கோவில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருநது மூலவர் ஆதிபுரீஸ்வரரை வழிபட்டனர்.நேற்று முன்தினம் இரவு தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை தனது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து வழிபட்டார்.

    இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரைப்பட நடிகர் லாரன்ஸ், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, நேதாஜிகனேசன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுவரை சுமார் 50ஆயிரம் பேர் தரிசித்து உள்ளனர்.

    இன்று இரவு 8.30 மணி வரை மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் வடிவுடையம்மன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். சன்னதி தெரு முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு உள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூரில் பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்த தந்தை மற்றும் மகன் மயக்கம் அடைந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஒண்டி குப்பத்தைச் சேர்ந்தவர் ரகுமான்கான். இவரது மனைவி ஆஷிகா, மகன் ஆசிப்கான் (5).

    ரகுமான்கான் காலடிப்பேட்டை மார்க்கெட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் குளிர்பானம் வாங்கினார். அதை குடித்த சிறுவன் ஆசிப்கானுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    குளிர்பானம் கசப்பு தன்மையுடன் இருப்பதாக தந்தையிடம் கூறினான். உடனே ரகுமான்கானும் அந்த குளிர்பானத்தை குடித்த துர்நாற்றம் வீசியது. இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    அப்போது குளிர்பான பாட்டிலை பார்த்தபோது அதன் உள்ளே பல்லி இறந்து கிடப்பது தெரிந்தது.

    இதையடுத்து தந்தை- மகன் இருவரையும் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவொற்றியூரில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், தவறி விழுந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #BusAccident #StudentDeath
    திருவொற்றியூர்:

    எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கபிலன் (வயது 14). இவர், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவர் கபிலன், நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக வள்ளலார் நகரில் இருந்து மாதவரம் செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 56 டபிள்யூ) சென்றார். அவர், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பஸ் தட்டு தடுமாறி சென்றது. பெரியார் நகர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியபோது, ஒருபுறமாக சாய்ந்தபடியே சென்றது.

    இதனால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர் கபிலன், சாலையோரம் இருந்த மின்சார பெட்டியில் மோதி பஸ்சுக்கு அடியில் விழுந்து விட்டார். அவர் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவர் கபிலன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார், பலியான மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவதாக கூறி, சாலையை சீரமைக்க வலியுறுத்தி திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான மீஞ்சூரை அடுத்த விச்சூரைச் சேர்ந்த விநாயகம் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #BusAccident #StudentDeath

    திருவொற்றியூரில் பெண் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மார்க்கெட் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுருக்கு பையில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவொற்றியூரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஜோதி நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன், என்ஜினீயர். இவர் கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று காலை பழனியப்பன் திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது காரை அங்குள்ள போலீஸ் பூத் அருகே நிறுத்தி இருந்தார். மர்ம நபர்கள் காரில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டரை திருடி சென்று விட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர்.

    திருவொற்றியூரில் வடமாநில வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் விம்கோ நகரில் தனியார் பள்ளி உள்ளது. இதன் பின் பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. வட மாநிலத்தவர் தோற்றத்தில் காணப்பட்டார். டி-சர்டடும், ஷாட்சும் அணிந்து இருந்தார்.

    உடல் கிடந்த இடம் அருகே கத்தி கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வட மாநில வாலிபர்கள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    எனவே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அவரை யாரேனும் அழைத்து வந்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக தொழிற்சாலைகளில் வேலை பார்த்த வட மாநில வாலிபர் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×