என் மலர்
இந்தியா

யோகி ஆதித்யநாத்தை பாராட்டிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ: கட்சியில் இருந்து நீக்கிய அகிலேஷ்
- தனது கணவர் கொலை வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்தாக முதல் மந்திரிக்கு நன்றி என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பூஜா பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வான பூஜா பால் பேசுகையில், தனது கணவர் கொலை வழக்கில் நீதியை பெற்றுத் தந்ததாக முதல் மந்திரி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியைப் பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பாலை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா பால், சமாஜ்வாதி கட்சியினரின் பெண்களுக்கு எதிரான நிலையை இது காட்டுகிறது என கடுமையாகச் சாடினார்.






