ஈரோடு மாவட்டத்தில் பரலாக பெய்த மழை

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் பரலாக பெய்த மழை
Published on

ஈரோடு:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யா விட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையின் நேற்று காலை வழக்கம் போல் ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.

பின்னர் மாலை திடீரென வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இரவிலும் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பவானிசாகரில் 17.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், கொடிவேரி, கொடுமுடி, நம்பியூர், கவுந்தப்பாடி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி போன்ற பகுதி களிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

பவானிசாகர்-17.40, எலந்த குட்டைமேடு-16.80, சத்தியமங்கலம்-15, கோபி-14.20, குண்டேரி பள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-8, கொடிவேரி-7, கொடு முடி-6.20, நம்பியூர்-6, கவுந்தபாடி-5.20, மொடக்குறிச்சி-3.40, தளவாடி-1.50, பவானி-1.20.

X

Maalai Malar
www.maalaimalar.com