என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "erode district"
- மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது.
- கவுந்தப்பாடி பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகி றது. குறிப்பாக இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கோபி, நம்பியூர், புளியம்பட்டி பகுதியில் உள்ள தரைப்பால ங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, கோபி, பெரு ந்துறை, தாளவாடி, கொடுமுடி, சத்தியமங்கலம், நம்பியூர் போன்ற பகுதிகளி லும் சாரல் மழை பெய்தது.
கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம், குண்டேரி ப்பள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி-28.20, வரட்டுப்பள்ளம்-17, பவானி-15.80, அம்மா பேட்டை-14.20, தாளவாடி-11, கோபி-10.20, பெருந்துறை-10, பவானி சாகர்-8.20, கொடுமுடி-8, ஈரோடு-6.20, கொடிவேரி-6, சத்தியமங்கலம்-3, நம்பியூர்-2.
- பட்டாசு கடைகள் அமைக்க 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
- மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடைவீதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க மொத்தம் 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதில் உரிய பாதுகாப்பு, பல்வேறு அம்சங்கள் இடம் பெறாத காரணத்தினால் 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது,
தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் 2 வாசல் கண்டிப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதேப்போல் பாதுகாப்பு உபகரணங்கள் கடையில் இருக்க வேண்டும்.
300 லிட்டர் அளவு தண்ணீர் சேமித்து வைத்தி ருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக புகை பிடித்தல் கூடாது போன்ற அறிவுரை பட்டாசு கடைக்காரர் களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
மேலும் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் தினமும் காலை, மாலையில் தீயணைப்பு துறை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வீடுகளுக்குள் வெடி எடுக்கக் கூடாது. குடிசை பகுதி, தென்னை மரம் அருகே ராக்கெட் வெடிக்க கூடாது போன்றவை அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
- அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் 133 பள்ளிகளில் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
ஈரோடு:
அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் படிக்க வழிவகை செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜெ.இ.இ. பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, எலைட் பள்ளி என 133 பள்ளிகளில் நீட், ஜெ.இ.இ. பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வகுப்பை காலை அல்லது மாலை நேரத்தில் நடத்தி கொள்வது குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பயிற்சி வகுப்பு நடக்கும். வெள்ளிக்கிழமை தேர்வு குறித்த மதிப்பீடு நடக்கும். இதே நடைமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு பயிற்சி வகுப்பாக மட்டும் நடந்தது. இந்த ஆண்டு பயிற்சி வகுப்புடன் தினமும் தேர்வும் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கொடுமுடி மகுடேஸ்வரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது.
- பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
கொடுமுடி:
ஜப்பசி மாதம் பவுர்ண மியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.
கொடுமுடி மகுடேஸ்வ ரர்கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் மகுடேஸ்வர ருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷே கம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகுடே ஸ்வரரை வழிபட்டனர். பின்னர் கோவில் அர்சகர் பிரபு குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடுகள் நடத்த ப்பட்ட பின்னர் காவிரி ஆற்றில் அர்ப்பணம் செய்ய ப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு மாலை விநாயகர் வழிபாடு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் அபி ேஷகமும், இரவு மகாபிேஷ கம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்ய அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்தது.
சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் திருமேணி 50 கிலோ அரிசி மற்றும் 30 கிலோ காய்கறி, பட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாசநாதருக்கு பூஜைகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல் சென்னி மலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில் உள்ள மிக பழைமையான மேற்கு பார்த்த பிரமன் பூஜித்த தலமான ஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது.
கைலாசநாதர் திருமேணி 25 கிலோ அரிசி மற்றும் 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு பூஜைகள் நடந்தது.
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவில், சுப்பிரமணியர், கோவில், காமாட்சி அம்மன் கோவில், மருந்தீஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் சிவபெரு மான் மற்றும் அம்மைக்கு அன்னாபிஷே சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அன்னத்தினால் தெய்வங்களை அலங்க ரிக்கப்பட்டு காய்கறி, பழங்க ளால் மாலை அணிவிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்ட ப்பட்டது.
தொடர்ந்து பொது மக்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பத்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள உலக புகழ் பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பவுர்ணமி யையொட்டி நேற்று அதி காலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை பெண்கள் விளக்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
இதில் பவானிசாகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு, அக். 17-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இரவில் கனமழை கொட்டி தீர்த்தது.
பவானியில் அதிக பட்சமாக 11 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் பெருந்துறை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் நேற்று காலை முழுவதும் மேகம் மூட்டத்துடன் இருந்தது. காலையில் மழை பெய்யவில்லை என்றாலும் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் இரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 55.80 மி.மீ மழை பதிவானது.
இதேபோல் கொடுமுடி, கொடிவேரி, பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, சத்தியமங்கலம், நம்பியூர், மொடக்குறிச்சி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.
இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
குண்டேரிப் பள்ளம்-55.80, கொடுமுடி-42, கொடிவேரி-33, பெருந்துறை-28, கோபி-17.20, அம்மாபேட்டை-17, சத்தியமங்கலம்-13, நம்பியூர்-12, மொடக்குறிச்சி-10, வரட்டுப்பள்ளம்-8.20, ஈரோடு-4, பவானி-2.80.
- வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
- தாளவாடி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலை யிலிருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
அதே போல் மாவட்ட முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக பதிவாகி இருந்தது.
இந்நிலையில் மாலை 5 மணி பிறகு வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி யுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
ஈரோடு மாநகரப் பகுதியில் சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் இரவு சாரல் மழை செய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
தாளவாடி பகுதியில் இரவில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்க லம், கோபி, பவானி, கவுந்த ப்பாடி, வரட்டுப்பள்ளம், கொடிவேரி, சென்னிமலை, நம்பியூர், பகுதிகளிலும் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
தாளவாடி - 33, கொடு முடி - 30.80, பெருந்துறை - 27, சத்தியமங்கலம்-27, கோபி - 25.20, பவானி - 21, பவானிசாகர் - 16, கவுந்தப்பாடி - 9.20, ஈரோடு- 9, வரட்டு பள்ளம்- 8.80, கொடிவேரி-6.20, சென்னிமலை - 5, நம்பியூர் - 3.
- கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
- பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி காலாண்டு தேர்வு விடு முறை விடப்பட்டுள்ளது. மேலும் மிலாது நபி, சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 4 நாட்களாக மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நேற்று (சனிக்கிழமை) மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் ஏராள மானோர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளி த்து மகிழ்ந்தனர்.
இதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொடிவேரிக்கு வழக்கத்ைத விட பொதுமக்கள் அதிகள வில் வந்தனர்.
மேலும் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இருந்து கொடிவேரிக்கு ஏராள மானோர் வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.
ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.
இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர்.
இதனால் பவானிசாகர் பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் பொது மக்க ளின் கூட்டமாவே காண ப்பட்டது. மேலும் இன்று அணை பூங்காவின் வெளி பகுதியில் மீன் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்க ப்பட்டு இருந்தன. அங்கும் மக்களின் கூட்டம் அலை மோதியது.
மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில் என கோபி, சத்தியமங்கலம் சுற் வட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் மக்க ளின் கூட்டமாக காணப்பட்டது.
இதே போல் அந்தியூர் வரட்டுபள்ளம் அணை பகுதிக்கும் பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அங்கு இயற்கை அழகை ரசித்து சென்றனர்.
மேலும் பர்கூர் வன ப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் ஏராள மானோர் வந்திருந்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்த அவர்கள் மலைப்பகுதி யின் அழ கை ரசித்து விட்டு சென்ற னர்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா விலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இரு ந்தது. குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி குதுகளித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
- அணை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- கொடிவேரி அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், குண்டேரிபள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேப்போல் பவானிசாகர் அணை, குண்டேரி பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இது தவிர அம்மாபேட்டை சத்தியமங்கலம், கோபி, பவானி, பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:
கொடிவேரி-29, பவானி சாகர்-22.80, அம்மா பேட்டை-18, சத்திய மங்கலம்-16, எலந்தகுட்டை மேடு-7, கோபிசெட்டி பாளையம்-5.20, குண்டேரி பள்ளம்-2.40, பவானி-1.40.
- ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை.
- அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து வரும் 28-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
- முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
அமைச்சர் சு. முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு திண்ட லில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கோபி, சித்தோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21),
சித்தோடு அம்மன் நகரை சேர்ந்த பாலநாதகுமார் (50), சென்னிமலை பாரதிநகரை சேர்ந்த சுப்ரமணி (57), சக்தி வடக்கு பேட்டையை சேர்ந்த இன்பராஜ் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
- இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.
ஈரோடு:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு வேலை நாளாக உள்ளதால் இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்