search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "190 villages in"

    • ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 190 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் அனைத்து கிராமங்களும் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகுவதை தடுக்க பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது.

    போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதோடு, அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் மேற்கு மண்டலத்தில் ஐ.ஜி.சுதாகர் உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,562 கிராமங்களில் 250 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 190 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போலீசார் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    கடைகள், குடோன்களில் அவ்வப்போது சோதனை நடத்தி போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்கள், விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1562 கிராமங்களில் முதல்கட்டமாக 250 கிராமங்களை தேர்வு செய்து அதில் இதுவரை 190 கிராமங்கள் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அனைத்து கிராமங்களும் கஞ்சா புழக்கம் இல்லாத கிராமங்களாக மாற்றப்படும்.

    ஈரோடு புதுமைக் காலனியில் கடந்தாண்டு வரை கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்தது. போலீ சாரின் நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×