என் மலர்
நீங்கள் தேடியது "Nitin Gadkari"
- மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
- அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை
டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பினார்.
அதாவது, நிதின் கட்கரியின் கார் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் அசாமில் அத்தகைய சாலைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுங்க வரி செலுத்தினாலும் அசாம் மக்களுக்கு தரமான சாலைகள் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்களால் மணிக்கு 100 முதல் 130 கி.மீ வேகத்தில் ஓட்ட முடியவில்லை என்று கோகாய் கூறினார்.
இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது, கௌரவ் கோகோய் கூறியது உண்மை என்றும், விசாரணை நடத்தப்பட்டு சாலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இப்போது நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
- தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:
தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனை 4.2 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என தெரிவித்தார்.
- எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது என நிதின் கட்கரி பேசினார்.
- அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன என நிதின் கட்கரி பேசினார்.
இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரி, "எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன" என்று தெரிவித்தார்.
துபாய் சாலைகளை விட இந்தியாவின் சாலைகள் தரமாக உள்ளதாக நிதின் கட்கரி பேசியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
- பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக புகார்
- டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கிய நிலையில், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது.
ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுவதால் (E 20) வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டின் உரையாற்றிய நிதின் கட்கரி, "டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், தற்போது டீசலுடன் ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிரான கருத்துக்கள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார்.
- எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
- மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.
மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் தான் சிறந்த தலைவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று நிதின் கட்கரி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "மக்களை ஏமாற்ற தெரிந்தவர் தான் சிறந்த அரசியல்வாதி. எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
எல்லாருக்கும் அவரவருக்கான நோக்கங்கள் உள்ளன. மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, உண்மையே இறுதியில் வெல்லும் என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் எழுதியிருக்கிறார்.
வேண்டிய விஷயங்களை சாதிக்க பல குறுக்கு வழிகள் இருக்கும். நீங்கள் விதிகளை மீறி, ரெட் சிக்னலை பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம், ஆனால் ஒரு தத்துவ ஞானி சொன்னதுபோல், குறுக்குவழிகள் உங்கள் பயணத்தை முடக்கிவிடும்.
எனவே உண்மை மற்றும் அர்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள்" என தெரிவித்தார்.
- பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
- இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து திட்டங்கள், சாலை போக்குவரத்து கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்களை வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மர வங்கி, செல்போன் அடிப்படையிலான டிரைவிங் பயிற்சி, 11 முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் நெகிழ்வுத்தன்மை கொண்ட எந்திரங்கள் என இந்தியாவின் போக்குவரத்து துறை மிகப்பெரிய மாற்றம் பெற்று வருகிறது.
மேலும் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இருவழிப்பாதை 4 வழிச்சாலையாக மாற்றுதல், முக்கிய வழித்தடங்களில் அதிவேக மின்சார போக்குவரத்து நெட்வொர்க் நிறுவுதல் மற்றும் சாலை கட்டுமானத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீ ஆக உயர்த்துதல் போன்ற திட்டங்களும் உள்ளன.
நாங்கள் புதுமைகளை முன்னெடுத்துச்செல்கிறோம். போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பயணிக்கும் விதத்தை மாற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
பெருநகரங்களில் மட்டுமல்ல, தொலைதூர மற்றும் அணுக முடியாத கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. கேதார்நாத் உட்பட 360 இடங்களில் ரோப் கார்கள், கேபிள் பஸ்கள் மற்றும் பனிகுலர் ரெயில் திட்டங்களை நாங்கள் அமைத்து வருகிறோம். இவற்றில் 60 திட்டங்களில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவிடப்படுகிறது. இவற்றின் பணிகள் முடிவடைந்தால் இந்தியாவின் முகத்தையே அது மாற்றும்.
மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துசக்தியாக இருப்பது மட்டுமின்றி, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும்.
இன்னும் ஓராண்டில் நமது நெடுஞ்சாலைகளின் தரம் அமெரிக்க சாலைகளின் தரத்தை ஒத்திருக்கும் என நான் அதிகமாக நம்புகிறேன். பெருநகரங்களில் கேபிள் மூலம் இயங்கும் பஸ்கள், விமானம் போன்ற வசதிகளுடன் கூடிய மின்சார விரைவுப் போக்குவரத்து பஸ்கள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மெட்ரினோ பாட் டாக்சிகள், ஹைப்பர்லூப் அமைப்புகள் மற்றும் தூண் அடிப்படையிலான வெகுஜன விரைவான போக்குவரத்து போன்ற அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான முன்னோடித் திட்டங்கள் தயாராக உள்ளன.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்கள் இருவரும் வருகிறார்கள். இது ஒரு புரட்சியாக இருக்கும். டாடா, டயோட்டா, ஹூண்டாய், மகிந்திரா உள்பட 11 நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நெகிழ்வான எரிபொருள் எந்திர வாகனங்களை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.
2013-14-ல் 91,287 கி.மீ.யாக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 60 சதவீதம் அதிகரித்து 1.46 லட்சம் கி.மீ.யாக உள்ளது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
- பைக்குகளுக்கு சுங்க வரி விதிக்க உள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.
- இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும் என்றார் நிதின் கட்கரி.
புதுடெல்லி:
இந்திய நெடுஞ்சாலைகளில் ஜூலை 15-ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என இணைய தளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
- புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம்.
- பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் தெரிவித்தார்.
இந்திய சாலைகளில் வாகனங்களின் ஹாரன்களால் ஏற்படும் ஒலி மாசைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறையை கையாள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,
தற்போதுள்ள ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ஹாரன்களை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து வாகனங்களின் ஹாரன்களிலும் இந்திய இசைக்கருவிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை கேட்க இனிமையாக இருக்கும்.
புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் தெரிவித்தார்.
- மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
- மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம்.
புதுடெல்லி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது, டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாடு அளவீடுகளை குறிப்பிட்ட அவர், டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும், வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்து விடும் என்றும் சொன்னார். "3 நாட்கள் அங்கு தங்கினீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஏதாவது தொற்று வந்துவிடும்" என்று கூட்டத்தினரைப் பார்த்து அவர் கூறினார்.
மாசுபாட்டில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இருப்பதாகவும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை அவசரமாக கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாசுபாட்டை தடுப்பதற்கான தீர்வாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டை அவர் அவசியம் என குறிப்பிட்டார்.
மேலும், "மாசுபாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை காரணம். நாங்கள் கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடி மதிப்புக்கு புதை படிவ எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை நான் ஆதரிக்கிறேன். புதை படிவ எரிபொருள் இறக்குமதியை குறைத்து, பசுமை எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளின் பைகளில் ரூ.12 லட்சம் கோடி வரை சேமிக்க விரும்புகிறேன்" என்றார்.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் தயாரித்த காற்று தர குறியீட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மேற்கண்ட எச்சரிக்கை விஷயங்களை அவர் குறிப்பிட்டார்.
- நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது.
- பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாக இருந்தது.
சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே கொள்கை ஆகும்.
நாங்கள் ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறோம். பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.
இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய முடியாது.
ஆனாலும் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருக்கிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன.
இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.
இந்த பாராளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க உள்ளோம். அதன்மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.
ஏனெனில் அதில் நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
- மந்திரி நிதின் கட்கரியின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
- இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
சிலிகுரி:
மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு சிலிகுரியில் நடைபெற்ற ரூ.1,206 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். டார்ஜிலிங் சந்திப்புக்கு அருகில் உள்ள டகாபூர் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அங்கு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மேடையில் இருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தான் மிகவும் சோர்வாக உணர்வதாக நிதின் கட்கரி அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் டார்ஜிலிங் பா.ஜ.க. எம்.பி. ராஜூ பிஸ்டாவின் இல்லத்திற்குச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மத்திய மந்திரி நிதின் கட்கரி கடிதம் ஒன்று வெளியிட்டார்.
- அதில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க. எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக தனது பதில் கடிதத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில், சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 60 கி.மீ. தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதை அறிவேன். சில மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.






